நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 செஞ்சிக்கோட்டைக்கு தனித்த வரலாறு உண்டு. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது செஞ்சி. ஆனந்தக்கோனாரால் அமைக்கப்பட்டது. சோழர்களால் சிங்கப்புரநாடு என்றும், முகலாயர்கள் பாதுஷாபாத் என்றும் செஞ்சியை பெயரிட்டு ஆட்சியாண்டனர்.


செஞ்சிக்கோட்டையை 13 ஆம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட தொடங்கினர். கோட்டை கொத்தளங்கள் கட்டப்படுவதற்க்கு முன் இந்த மலைப்பகுதி சுமார் 10 நூற்றாண்டுகளாக ஜெய்ன துறவிகள் வசம்மிருந்துள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்றில் பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கு கோயில்கள் கட்ட தொடங்கினர். பின் பிற்கால சோழர்கள் காலத்தில் இப்பகுதி அவர்கள் வசம்மிருந்துள்ளது, அவர்களுக்கு பின் பாண்டியர்கள் வசம்மும் இருந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் இங்கு கோட்டைகள் கட்ட தொடங்கப்பட்டன. 1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரையிலான விஜயநகர அரசர்கள் இதனை விரிவுப்படுத்தி பலம் பொருந்தியதாக அமைத்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது செஞ்சி தான் அதன் தலைநகராக விளங்கியது.

மராட்டிய மாமன்னன் சிவாஜி ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோட்டையை பிஜப்பூர் சுல்தான் படைகள் தங்கள் வசம் கொண்டுவந்தனர். இந்த கோட்டை, யாரும் எளிதில் நுழைய முடியாத பலமான கோட்டை.   ஆகவே அது நம் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என மீண்டும் சிவாஜி படை திரட்டி இக்கோட்டையை தன் வசம்மாக்கினார்.


செஞ்சிக்கோட்டையை கிருஷ்ணகிரிமலை, சக்கிலிதுர்க், ராஜகிரி என பெயர் கூட்டப்பட்ட மூன்று மலைகளும் இந்த கோட்டைக்கு பாதுகாப்பாக உள்ளன. மேலும் அதன் அருகே இரண்டு குன்றுகளும் உள்ளது. இந்த மலைகள் நீண்ட சுவறால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜாவுக்கு என்று தனி கோட்டையும், கிருஷ்ணகிரி மலையில் இராணிக்கென்று தனி கோட்டையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை சுற்றி அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.

செஞ்சிக்கோட்டையை கடைசியாக தேசிங்குராஜா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனைப்பற்றியும். ஆட்சியைப்பற்றியும், அவன் வீரத்தைப்பற்றி வாய்வழி பாடல்களாக பல கதைகள் இங்கு உண்டு.

ராஜாதேசிங்கு:-


மராட்டிய மன்னன் சிவாஜி டெல்லி சுல்தானான அவுரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை தன் வசம்மாக்க படை எடுத்து பல பகுதிகளை பிடித்து வந்தார். ஆந்திரா, கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தது சிவாஜியின் படை. சிவாஜி இறந்தபின் அவரது மகன் ராஜாராம் அதே பணியை செய்தார். ஆனால் அவுரங்கசீப்பின் படை முன் ராஜாராம் படைகள் தோற்றன. இதனால் ராஜாராம் அங்கிருந்து தப்பி செஞ்சிக்கோட்டைக்குள் பதுங்கினார். ராஜாராம்மை கைது செய் அல்லது கென்றுவிட்டு வா என தன் படை தளபதிகளுள் ஒருவரான முகமூத்கான் என்பவர் தலைமையில் படையை அனுப்பினார். அந்த படை செஞ்சியை முற்றுகையிட்டது. 11 மாத முற்றுகையில் குதிரைப்படை தளபதியாக இருந்த சொரூப்சிங் என்பவர் கோட்டையின் முற்றுகையை உடைத்தார். இதனால் அவுரங்கசீப்பின் படை வெற்றி பெற்றது. ஆனால் ராஜாராம் அங்கிருந்து தப்பினார். போரில் வீரத்துடன் போரிட்டதால் இப்பகுதியை ஆளும்பொறுப்பை அவுரங்கசீப் சொரூப்சிங்கிடம் ஒப்படைத்தார். சொரூப்சிங் அவரது மனைவி ராமாபாய்க்கு மகனாக பிறந்தவன் தான் ராஜாதேசிங்.

டெல்லியில் அவுரங்கசீப் இறக்க அவரது மகன் ஆலம்ஷா டெல்லி சுல்தானாக பதவியேற்றார். ஒருமுறை ஆலம்ஷா வாங்கிய பரிகாரி என்ற முரட்டு குதிரை தன் மேல் யாரும் ஏற முடியாதபடி முரண்டு பண்ணியது. இதனால் எந்த குதிரையையும் அடக்கும் வல்லமை கொண்ட சொரூப்சிங்கை செஞ்சியில் இருந்து டெல்லி வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி சொரூப்சிங் தன் மகன் தேசிங்குடன் டெல்லி சென்றார். அக்குதிரை சொரூப்சிங்கால் அடக்க முடியவில்லை. ஆனால் தேசிங் அக்குதிரையை அடங்கினார். இதில் சந்தோஷமான ஆலம்ஷா அவனது வீரத்தை பாரட்டும் விதமாக அக்குதிரையை தேசிங்க்கு பரிசாக வழங்கினார். மற்றொரு தளபதி தன் மகளான இராணிபாய்யை தேசிங்க்கு மணமுடித்து வைத்தார்.


தன் மனைவி நினைவாக தேசிங்கு இராணிப்பேட்டை என்ற கிராமத்தை உருவாக்கினார். அரங்கன் என்ற கடவுளே அவனின் குல தெய்வமாகும். அது செஞ்சிகோட்டை அமைந்துள்ள பகுதியில் இருந்து 2 பர்லாங்க் தொலைவில் உள்ள சிங்கவரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு இராணிபாய் போய்வர ரகசிய பாதை அமைத்துள்ளார். இராஜாதேசிங், எந்த முக்கிய பணி செய்தாலும் அரங்கனிடம் அனுமதி பெற்றே செய்வார். சொரூப்சிங்க்கு பிறகு இராஜாதேசிங் பதவிக்கு வந்தார். அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் படை தளபதி இஸ்லாமியரான முகம்மதுகான். அதேபோல் தனது குதிரை நீலவேணி மீதும் அதிக ஈடுபாடு கொண்டவன் இராஜாதேசிங்.

ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்தான். அப்போது இராஜாதேசிங் அரங்கனிடம் சென்று அனுமதி கேட்டபோது, இன்று போகாதே என்றதாம். ஆனால் தேசிங், எதிரி வந்துவிட்டான் இனி திரும்பமுடியாது என்றபோது அரங்கன் முகத்தை திருப்பிக்கொண்டது. இன்றளவும் அச்சாமியின் முகம் திருப்பி கொண்டதாகவே காணப்படும். தேசிங் தோல்வியை தழுவி மாண்டான். அவனது குதிரை, தளபதியும் அப்போரில் மாண்டனர். செஞ்சி ஆற்காடு நவாப்பின் கீழ் வந்தது. அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. இதன் பாதுகாப்பு, நேர்த்தியை கண்ட ஆங்கிலேயர்கள் 1921 ஆம் ஆண்டு செஞ்சிக்கோட்டையை தேசிய நினைவு சின்னமாக அறிவித்தனர். அதன்படி இது தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கோட்டைக்குள் பார்க்க வேண்டிய இடங்கள்:-


ராஜகிரிகோட்டையின் மேற்பகுதியில் வெடிமருந்து கிடங்கு, இரண்டு தானியகிடங்கு, ஒரு பழைய பீரங்கி, அரசர்கள் கண்டுகளிக்கும் நடன போட்டி அரங்கம் போன்றவை உள்ளன. அரங்கநாதர் கோயிலும் உள்ளன. கீழ்பகுதியில், சபாமண்டபம், சிறிய குளம், எட்டு மாடிகளை கொண்ட கல்யாணமஹால் உள்ளன. கல்யாணமஹால் பின்புறம் வீரர்கள் தங்கும் இடம், சிறைச்சாலை, போர்வீரர்களுக்கான பயிற்சி கூடம், குதிரை லாயம், யானை தொட்டி, போர் வீரர்களுக்கான தங்கும் அறைகள் போன்றவை கட்டப்பட்டள்ளன. இதற்கு மிக அருகில் தேசிங்கின் உற்ற நண்பனான மகமத்கான் தொழுகை செய்ய மசூதியும் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரிமலை அல்லது இராணிக்கோட்டை என அழைக்கப்படும் மலை 500 அடி உயரம் கொண்டது. அதன் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கிருஷ்ணகோனான் காலத்தில் கட்டப்பட்டது. உச்சியில் நெற்களஞ்சியம் உள்ளது. கீழே பூவாத்தம்மன் கோயில் உள்ளது.


சங்கிலி துர்க்கம் என்ற சந்திரக்கிரிக்கோட்டை முக்கியமானது. இங்குதான் அரசர்கள் தங்கியிருந்தனர். இம்மலை 700 அடி உயரம் கொண்டது. இங்குதான் தேசிங்கு அரசானாக முடிச்சூட்டிக்கொண்டான். அவன் இறந்ததும் அவனது உடலை இங்கு தான் தகனம் செய்தனர். தேசிங்கு மனைவி இறந்ததும் அவனது மனைவி இங்குத்தான் உடன்கட்டை ஏறினார். இந்த இடங்களை இன்றளவும் இங்கு காண முடியும்.

அதோடு உள்ளே செஞ்சியம்மன் கோயிலும் உள்ளது. இதனை சுற்றிப்பார்த்துக்கொண்டு வரும்போது பல மற்ப்போர், விற்ப்போர்களை சந்தித்த  கோட்டைக்குள் தற்போது ‘காதல் போர்களை’ மட்டுமே சந்தித்து வருகிறது. அதனை நீங்கள் கோட்டையை சுற்றி வரும்போது ஆங்காங்கு காணலாம்.
  

வழித்தடம் :

திருவண்ணாமலையில் இருந்து 35கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 160கி.மீ தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து 20கி.மீ தொலைவிலும் உள்ளது. சென்னையில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கின்றன. தொடர்வண்டியில் வருபவர்கள் திண்டிவனத்தில் இறங்கி பேருந்தில் செஞ்சிக்கு செல்லலாம். இங்கு தங்க ஏராளமான வசதிக்கு ஏற்றாற்போல் விடுதிகள் உள்ளன. தரமான உணவு விடுதிகளும் இங்குண்டு.

-ராஜ்ப்ரியன்  
  
  
  
  
  


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [11]
Name : yuvarajsryadav@gmail.com Date :1/30/2016 11:22:32 PM
ஆயர்களின் வரலாறு
Name : S.MURUGAN Date :7/15/2015 2:01:36 PM
செஞ்சி கோட்டை என்ன அருப்புதம் என்னதான் இருந்தாலும் அரங்கன் சாமி பேச்சை கேட்டு ஏற்றுக்கனும்.
Name : partha sarathy Date :6/22/2015 4:17:26 PM
சூப்பர் சூப்பர் சூப்பர்
Name : தருமன் Date :1/30/2015 6:34:21 AM
பதிவு. அருமையான வழிகாட்டுதல். நன்றி
Name : D.KATHAVARAYAN Date :8/1/2014 5:33:34 PM
மிகவும் நன்றாக இருக்கிறது புகைப்படங்கள் அற்ப்புதம் நேரில் பார்த்தது போல இருக்கிறது நன்றி .
Name : nirmala Date :6/4/2014 5:34:49 PM
மிக்க நன்றி. எடுத்து சொல்ல அல்லிளில்லாத போதும், எட்டுதுகோலும் வகையில் எடுதுரைததற்கு
Name : S.Theiventhiran Date :5/17/2014 8:54:42 PM
அருமையாக இருக்கு சூப்பர் தேங்க்ஸ் டு you
Name : elamparithi.vpr Date :4/12/2014 12:29:19 PM
சுருக்கமாகவும் ...சுவையாகவும் ....செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ...அருமை...
Name : ksubramanian Date :8/5/2013 8:46:37 PM
ஆஹா அருமை !!!!அற்புதம் !!!!
Name : G.NIRMALA MARY Date :7/5/2013 12:14:03 PM
தேங்க்ஸ் எ லோட். இ வாஸ் வெரி வெரி ஹாப்பி டூ திஸ் போர்ட். திஸ் இச் மி லாங் ட்றேஅம் போர் இட். தேங்க்ஸ் டு ஆல்.
Name : Ulla Date :4/6/2013 11:20:56 PM
Great insight. Relieevd I'm on the same side as you.