நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 இயற்கைத்தாயின் மடியில் தாய்லாந்து ரொம்பவே அரவணைப்பாக இருக்கிறது.  அழகான கடற்பகுதி.  சிறு சிறு தீவுக்கூட்டங்கள், பசுமைப் பட்டுப் போர்த்திய மலைகள்,தென்னை மரங்கள், வயல்கள் என கண்ணுக்குட்பட்ட பகுதிகள் எல்லாம் இயற்கையின் தாலாட்டுப்பாட்டு இசைக்கும் பகுதியாகவே இருக்கிறது.


ஆசியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது தாய்லாந்து.  அந்த அளவுக்கு நெல் விளைச்சல் அதிகம்.  அதனால், தாய் மக்களுடைய முக்கிய உணவு, நம்மைப்போல சோறுதான்.  மிக உயர்ந்த அரிசி ரகமாக அவர்கள் குறிப்பிடுவது ஜாஸ்மின் என்ற அரிசி ரகத்தைத்தான்.  

மீனவர்களும், வயல்வேலை செய்பவர்களும் பேண்ட்டுக்குப் பதில் ஷார்ட்ஸ் போட்டுக் கொள் கிறார்கள்.  தாய்லாந்து பெண்களின் பாரம்பரிய உடை, டாப்ஸும்  கணுக்கால் வரையிலான ஸ்கர்ட்டும்.  ஆனால்,  அவர்களில் பலர் ஜீன்ஸ்பேண்ட்,டி-ஷர்ட் என்று தங்கள் வேலைக்கு வசதியான உடையை அணிந்து கொள்கிறார்கள்.  சிலர் ஷார்ட்ஸ், டாப்ஸ் அணிந்துகொள்கிறார்கள்.

தலைநகர் பேங்காக்கிலும் அங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டையாவிலும் பெண்களைத்தான் அதிகளவில் பார்க்க முடிகிறது. அவர்கள் நல்ல உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.  பேருந்தை ஓட்டுபவர்களில் பெரும்பாலும் பெண்களை பார்க்க முடிகிறது.டாக்ஸி டிரைவர் சீட்டில் ஆண்களே அதிகம்.


சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரக்கூடிய கடற்கரைப்பகுதிகள், மிதக்கும் அங்காடி ( floating market),  உணவகங்கள்,  வழிகாட்டிகள், பாரம்பரிய மசாஜ் நிலையங்கள், மருந்துக்கடைகள், தள்ளு வண்டிக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள் என்று எல்லா இடங்களிலும் பெண்களையே அதிகம் காணமுடிகிறது.   இரவு 2 மணிக்கு கூட பரபரப்பாக அவர்கள் உழைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

தாய்லாந்தின் தாய்மொழி தாய் (thai).   தாய் மொழியின் வேர்ச் சொற்களில் பல இந்தியத் தன்மையைக்  கொண்டிருக்கின்றன. பேங்காக் விமான நிலையத்தின் பெயர் சொர்ண்பூமி என்பதிலி ருந்தே இதைப்புரிந்துகொள்ளலாம்.   சீனமும் சமஸ்கிருந்தமும் தாய் மொழியில் தம் ஆளுமையைச் செலுத்துகின்றன.  நம் தாய்மொழியான தமிழ் மொழியும்  தாய்லாந்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

நம்மைப்போலவே கைகுவித்து வணங்குவது தாய்லாந்து மக்களின் மரபாக இருக்கிறது.  வணக்கத்திற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல், சவாதி.


பெரிய வணிக வளாகங்கள், சிறு உணவகங்கள் எனப் பல இடங்களிலும்  நம்ம ஊர் பிள்ளையாருக்கு கட்டுவது போல ஒரு சிறு கோவிலைக் கட்டி அதில் தங்கள் கடவுளின் உருவத்தை வைத்து வழிபடுகிறார்கள்.   குருக்களோ, பூசாரிகளோ கிடையாது.  மக்களே பூப்போட்டு, பத்தி கொளுத்தி செல்கிறார்கள். 

தாய்லாந்தில் சிறு தெய்வ வழிபாட்டுடன் மாந்த்ரீக நம்பிக்கைகளும் தாய்லாந்து மக்களிடம் அதிகளவில் இருக்கிறது. 

பச்சைக்குத்திக்கொள்வது என்பது அவர்களின் கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கையாக இருக்கிறது.   உடல் முழுவதும் குத்திக்கொள்வது, முதுகுப்பக்கம் முழுவதும் குத்திக்கொள்வது, கை முழுக்க குத்திக்கொள்வது என்ற பழக்கம் இருப்பதால், வெளிநாட்டவர் பலரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள்.

உணவு சமைக்கப்படு இடத்தையோ,விற்கப்படும் இடத்தையோ கடந்து சென்றாலே மூலிகை வாசனை அடிக்கும்.  காரம்,மணம்,குணம் எல்லாவற்றுக்கும் மூலிகைகளையே அதிகம் பயன்படுத் துவதால்  உணவே இவர்களுக்கு மருந்தாகிறது.   உணவே மருந்தாக இருப்பதால் தாய்லாந்து ஆண்களில் பெருந்தொப்பைகாரர்கள் அதிகம் இல்லை.

தாய்லாந்தின் நாணயம் பாட் என்ப்படுகிறது.  அவர்களின் ஒரு பாட், நமது மதிப்பில் ஒன்றரை ரூபாய்.


கடற்கரை நகரமான பட்டையாவில் பகலைவிட இரவுதான் பளிச்சென இருக்கிறது.  தாய்லாந்தின் சின்ன வயது பெண்கள் முதல் பேரிளம் பெண்கள் வரை தங்கள் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.  சில ரஷ்ய பெண்களும் உண்டு.  அப்புறம் திருநங்கைகளும் அழைக்கிறார்கள்.

காரியத்தை முடிச்சிட்டு கிளம்பு ... என்கிற ரகமல்ல தாய்லாந்து பெண்கள்.  நீங்கள் பேசுகிற- பழகுகிற விதம் அவர்களுக்கு பிடித்துவிட்டால் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ராத்திரி முழுக்க சந்தோசமாக குடும்பம் நடத்திவிட்டு  போகக்கூடியவர்கள் இந்த பெண்கள் என்கிறார்கள் தாய்லாந்து டாக்ஸி டிரைவர்கள்.

கடற்கரை சாலையின்  கடைசியில் இருக்கிறது வாக்கிங் ஸ்ட்ரீட்.  இங்குதான் பாலியல் சொர்க்கம் இருக்கிறது.  சாலையின் இரண்டு புறமும் பப்-கள்,நடன விடுதிகள்,இசை அரங்குகள், மசாஜ் கிளப்புகள் என் சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கிக் கொண்டாடும் நிலையங்களே நிறைந்திருக்கின்றன.  அவற்றின் வாசல்களில் விதவிதமாக தாய்லாந்து பெண்கள் ஒயிலாக காட்சி தருகிறார்கள்.


வாக்கிங் ஸ்ட்ரீட்டில் கோ கோ பார் உள்ளது.   இங்கு கூட வந்த பார்ட்ட்யோடு நுழைந்தால் இலவசம்.   ஆண் மட்டும் தனியே போனால் 300 பாட் கட்டணம்.   பெரிய மேடையில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டே போகிறார்கள் தாய்லாந்துபெண்கள். பூமிக்கு எப்படி வந்தார்களோ அதே உடையில்! வாக்கிங் ஸ்ட்ரீட்டில் இப்படி பல கோ கோ பார்கள் இருக்கின்றன.

பட்டையாவில் தடுக்கி விழுந்தால் மசாஜ் செண்டர்கள்தான்.   எல்லா மசாஜ் செண்டர்களிலும் பெண்கள்தான் மசாஜ் செய்துவிடுகிறார்கள். தாய்லந்தின் பாரம்பரிய மசாஜ் என்பது தமிழ்நாட்டில் உள்ள சித்தவைத்தியம் - ஆயுர்வேதம், சீனாவின் அக்குபஞ்சர் முறைகள் என்ன சொல்கின்றனவோ அதன் கலவைதான்.

ஸ்பெஷல் மசாஜ் செண்டர்களும் இருக்கின்றன.   எத்தனை பாட் கேட்கிறார்களோ அதனைக்கொடுத்துவிட்டால் போதும்.    ஒரு ரூமுக்கு அழைத்துப்போவார்கள்.  அங்கே வாட்டர் பெட்டும், பாத் டப்பும் இருக்கும்.   வாட்டர் பெட்டில் வாடிக்கையாளரை படுக்க வைத்து அந்தப்பெண் தன் உடம்பாலேயே மசாஜ் செய்துவிடுவார்.   அந்த மசாஜின்போது பெண்ணின் உடம்பிலும் வாடிக்கையாளர் உடம்பிலும் துணி இருக்காது.

மேலும் சாண்ட் விச் மசாஜ், பர்கர் மசாஜ் இருக்கிறது.  இரண்டு பெண்கள் கீழும் மேலுமாக இருக்க, நடுவில் வாடிக்கையாளரை வைத்து மசாஜ் செய்வது சாண்ட் விச் மசாஜ்.   பர்கர் என்றால் மூன்று பெண்கள்.  நடுவே வாடிக்கையாளர். இதுதான் பர்கர் மசாஜ்.


பாட்டையா கடற்கரையில் பாராசூட்டில் பறக்கலாம்.   400 பாட் ( 600 ரூபாய்) கட்டணம்.  கீழே  கடல், மேலே வானம், சுற்றிலும் கட்டிடங்கள், மலைகள், புள்ளிகளாய் தெரியும் மனிதர்கள் என ஒரு பருந்துப்பார்வையுடன் உலகை ரசிக்கும் தருணம் அது.

கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பாயும் படகு சவாரி இருக்கிறது.   கடலுக்கு அடியில் நடக்கலாம்.    ஒரு நேரத்தில் 13 பேர் கடலின் ஆழத்தில் சென்று நடக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  தகுந்த உடை, தகுந்த பாதுகாப்பு, பாதுகாவலர்கள் உண்டு.  கட்டணம் 750 பாட். பவளத்தீவில் விதவிதமான படகு விளையாட்டுகள் உண்டு.  வாட்டர் ஸ்கேட்டிங் உண்டு.

டாலரோ , பாட்டோ கையிலிருந்தால் தாய்லாந்தின் இயற்கை - செயற்கை சொர்க்கங்களை அனுபவிக்க எந்தத் தடையும் இல்லை. தாய்லாந்து எல்லா வகையான சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்ற இடம்.  இயற்கை அழகும் கவர்கிறது.  செயற்கை அழகுகளும் கவர்கின்றன.

- கோவி. லெனின்

 

  
  
  
  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : nagendren Date :2/27/2014 11:08:44 AM
burger மசாஜ் சூப்பரா இருக்கும் ஒருமுறை சென்றால் மீண்டும் செல்ல தூண்டும் அங்கு ராஜா ராணி மசாஜ் இன்னும் சூப்பர் ஒரு ராஜா ஐந்து ராணிகள்.
Name : Vaibhav Date :4/7/2013 6:32:46 PM
Didn't know the forum rules aollwed such brilliant posts.