நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். மலாய் இனத்தவர்கள் 51விழுக்காட்டினரும், அத்துடன் மேலும் 11 விழுக்காட்டினர் ஏனைய பழங்குடி இனத்தவரும் சேர்ந்து ஏறக்குரைய 62விழுக்காடுகள் என்ற நிலையில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) பெரும்பாண்மை இனமாகத் திகழ்கின்றது.

இதற்கடுத்தாற் போல எண்ணிக்கையில் வருபவர்கள் சீனர்கள். ஏறக்குறையை 28 விழுக்காட்டினர். மக்கள் தொகையில் குறைந்திருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் மூல நாடி இவர்கள் என்பதே உண்மை. அதற்கடுத்தாற் போல தமிழர்கள். இவர்களின் எண்ணிக்கை 7.5% என்ற அளவில் உள்ளது. இதைத்தவிர மேலும் ஐரோப்பியர், தாய்லாந்துக்காரர்கள், அராபியர்கள் என சிறு விழுக்காட்டினர் அமைந்து மொத்த மகக்ள தொகையை உருவாக்கியுள்ளது.
 
இதில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) குழுவில் இடம்பெருபவர்கள், மலாய் இனத்தவர்களும் மலேசி யாவின் பூர்வக் குடியினரும்தான்.  மலேசியாவில் அதிகமாக சீனர்கள் நிறைந்திருக்கும் மானிலங் களில் ஒன்று பினாங்கு மானிலம். அதேபோல பேராக் மானிலமும் ஆகும்.மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத் தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் ஆனது நிர்வாக மொழியாக பயன்படுத்தப்பட்டது. 1969ல் நடந்த கலவரத்துக்கு பின் மலேசிய மொழி முதன்படுத்தப்பட்டது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தொடர்ந்து உள்ளது.

மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.  இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியை பேசுகின்றனர்.


இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியை யும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர். மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத் தின் பல வட்டார மொழிகளை பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுல் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர்.பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது.  ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன.

பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது. 


 
விமான நிலையத்தை தொடும்போதே, பிரமாண்டத்தை கொட்டிக்காட்டுகிறது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம். 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமான சேவை செய்து வருகிறது.

இன்னும் விரிவாக்கம் செய்து கொள்ள 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் அடர்ந்த வனப்பகுதியில் விமான நிலையம் இருக்கும்.  ஆனால், இங்கோ விமான நிலையத்தில் வனத்தை உருவாக்கியுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தை அடுத்தே, கோலாலம்பூரை தொட முடியும். நகருக்குள் நுழைந்ததுமே கோலாகலம் தொடங்கி விடும். அமைதியான, அழகாக வடிவமைக்கப்பட்ட கோலாலம்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன.

மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வியக்க வைக்கின்றன. ஆட்சியாளர்களின் திட்டமிடும் திறனும், அதை செயல்படுத்தும் வேகமும் நாட்டை வேகமாக முன்னேற வைத்திருக்கிறது. எப்போதும், என்றும் கட்டுமான பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

 முன்னேறிய நாடுகளை பார்த்தால், அங்கு என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்பதையெல்லாம் ஒவ் வொரு நாடாக சென்று பார்த்த மலேயர்கள், அவற்றை தங்களது நாட்டில் ஏற்படுத்த முனைந் துள்ளனர். உலகையே சுற்றிப்பார்ப்பதும், மலேசியாவை சுற்றிப்பார்ப்பதும் சமமாக கருதலாம்.

 நகரின் நடுவே உலகின் அதிசயமாக கோலாலம்பூர் பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம். உலகிலேயே உயரமான கோபுரம். 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது.

இந்த பாலமே நில மட்டத்திலிருந்து, 557 அடி உயரத்தில் (170 மீ) அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மைய கோபுரம் அழிந்த பின், இதுவே உலகின் பிரமாண்டமாக கருதப்படுகிறது. தினமும் 1700 பேர் மட்டுமே இந்த கோபுரத்திற்குள் சென்று வர அனுமதி உண்டு. இந்த இரட்டை கோபுரம் அமைந்துள்ள 17 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளன.


இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தை அமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததும், கடலுக்குள் சென்று விட்ட பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த அமைப்பிற்குள் 300 வகையான உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன. 60 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் இடம் பெற்றுள்ளது.  90 மீட்டர் தூரத்திற்கு நீருக்கடியில் நீளும் குகை அமைப்பில், நின்று கொண்டால் போதும், கீழ் உள்ள நகரும் அமைப்பு, முழுவதுமாக சுற்றிக் காண்பித்து விடும். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும்.

கோலாலம்பூரில் எழில் மிக்க ஒரு மாளிகை ஸ்ரீபடானா. முன்னாள் பிரதமர் வசித்த மாளிகையை, இப்போது அருங்காட்சியமாக்கி விட்டனர்.  50 ஆண்டு சுதந்திர தினத்தை பறைசாற்றும் நாணயத்தின் படத்தையும் ஓவியமாக வரைந்து பார்வைக்கு வைத்துள்ளனர். பார்லிமென்டில் உள்ள 228 உறுப்பினர்களின் பலத்தையும் உயர்த்திக் காட்டும் கை அமைப்பு அனைவரையும் கவர்கிறது.

 கோலாலம்பூரின் மற்றொரு அம்சம், "பவுலியன்' என்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இங்கு அனைத்து வகை பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளனர். அழகாகவும் நேர்த்தியாகவும், இடவசதியுடன் அமைந்துள்ள இக்கடைகளில், பொருட்களையும் அழகுடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஷாப்பிங் செய்வதற்கென்றே "மெகா சேல்' திட்டத்தை, மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து நடத்தினர்.  கைவினைப்பொருள் கண்காட்சியும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கில் துவங்கியுள்ளது. மலேசிய நாட்டின் பாரம்பரியமிக்க கலை நயமுடன் உருவாக்கப்படும் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

சிங்க முகம் கொண்ட மாபெரும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சன்வே பிரமிட். நான்கு தளங்களைக் கொண்ட இந்த காம்ப்ளக்ஸ், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தோற்றம், உட்புறத்தோற்றம் இரண்டிலுமே கவனமுடன் வடிவமைத்துள்ளனர்.


கோலாலம்பூரிலிருந்து மலாக்கா செல்வது எளிதானது; மலேசியா அமைத்துள்ள நீண்ட தூர "ஹைவே' ரோட்டில், மணிக்கு 100 கி.மீ.,வேகத்திற்கும் மேல் பறக்க முடியும். நேர்த்தியான ரோட்டில், விரைவாக செல்லலாம். ரோடுகளில் குறுக்கீடுகள் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. விலங்கினங்கள் கூட இந்த "ஹைவே'யில், குறுக்கிடாது.

 பழமையான, பழம்பெரும் நகரம் மலாக்கா. 15ம் நூற்றாண்டில், மலேசிய நாட்டின் வர்த்தகம் இங்கு நடந்ததற்கான சான்றுகள் பல உள்ளன.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரத்தை, "மலேசியாவின் வெனிஸ்' என அழைக்கின்றனர்.  1500ம் ஆண்டுகளில், சுல்தான்கள் ஆட்சி இருந்தது. இதற்கான கோட்டை இடம் பெற்றுள்ளது. இந்த நகரில், புகழ் பெற்ற பானம் சென்டால். இந்த பானம், ஐஸ் கட்டிகளை உடைத்துபோட்டு, தென்னங்கருப்பட்டியை கலந்து தயாரிக்கின்றனர்.

மரத்தால் ஆன மாளிகை, இங்கே மன்னர்கள் சொகுசாக வாழ்ந்த வரலாற்றைக் கூறுகிறது. மன்னர்களின் படுக்கை அறைகளில், பட்டத்து அரசியே ஆனாலும் அனுமதியின்றி நுழைய முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

பழம்பெரும் நகரமாக உள்ள இந்த மலாக்காவில், உள்ள அருங்காட்சியகத்தில், தமிழக மக்கள் பயன்படுத்திய பொருட் களை போன்றே பல உள்ளன. தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக இது திகழ்கிறது. சைக்கிள் முதல் இட்லி பாத்திரம் வரை பல வகை பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகமும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம்.

ஒவ்வொரு பொருளும் ஒரு சரித்திரம் சொல்வதாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் காணாமல்போன சைக்கிள் ரிக்ஷா சவாரியை அங்கு சுற்றுலா சவாரியாக்கியுள்ளனர். ரிக்ஷா முழுவதும் செயற்கை மலர் அலங்காரம் செய்து, அதில், பாடல் ஒலிபரப்பி, அழகாக ஒரு கி.மீ., தூரத்தை வட்டமிட்டு காட்டுகின்றனர். இதில், சவாரி செய்வதே ஒரு சிறப்பான அனுபவம் எனலாம்.


ஈபோ நகரில் உள்ள லாஸ்ட் வேர்ல்டுக்குள் நுழைந்து விட்டால், பல பல ஆச்சரியரிங்கள் காத்திருக்கின்றன. நுழை வாயிலில் ஆளுயர பூனை சிலைகள் வரவேற்கின்றன. இந்த பூனை சிலைகளை தெய்வமாகவும் இப்பகுதியினர் கருதுகின்றனர்.

லாஸ்ட் வேர்ல்டு என்ற தீம் பார்க்கிற்குள் நுழைந்து விட்டால் அவ்வளவும் அதிசயம். மலைப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில், சுடுநீர் ஊற்றை உணரலாம்.  ‘ஊசிமலை’ என்பதை நேரடியாக காண முடியும் இங்கே...ஆங்கிலத்தில் ’நீடில் ராக்’ என அழைக்கின்றனர்.

அழகு சூழ்ந்த சோலையில் இந்த ஊசிமலை அமைந்துள்ளது. இங்கு, இன்னும் சில அடி தூரத்தில் புலியை நேரில் பார்க்கலாம். ஜாலியாக உலா வரும் ஐந்து புலிகள், மிக அருகில் காணும் வாய்ப்பு இந்த உயிரியல் பூங்காவில் மட்டுமே காண முடியும். இன்னும் பல அதிசய பறவைகள், குட்டை ரக கோழி, முயல், எலி வகைகள் என அதிசய உலகம்..."லாஸ்ட் வேர்ல்டி'ல் உள்ளது. ஜாலியாக விளையாடவும், தண்ணீரில் துள்ளி குதித்து மகிழவும் அதிசய உலகம் இங்கு மட்டுமே உள்ளது.

 மலேசியாவிற்கு சென்றால், ஒராங்குட்டான் குரங்குகளை கண்டே தீர வேண்டும். இங்கு மட்டுமே உள்ள இந்த அதிசய குரங்கினம்...ஆசிய கண்டத்தில் அபூர்வமானது. மனிதனின் செயல்பாடுகளில் 90 சதவீதத்தை இவையும் செய்கின்றன.
 
மரத்தின் உச்சியில் கூடு கட்டி வசதிக்கும் பழக்கம் உடையவை இந்த ஒராங் குட்டான். "பேசத்தெரியாத மனிதன்' என்று கூட அழைக்கலாம். அரிய உயிரினமான உராங் குட்டான் குரங்கை, பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் ஏராளமாக செலவிட்டுள்ளது மலேசிய அரசு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : Latheepan Date :8/31/2016 9:31:49 PM
நல்ல பல கருத்துகளை பகிர்ந்துளனர் படங்கள் சற்று குறைவு இடங்களின் பெயபெயர்களும் குறைவு
Name : கணேசன் Date :4/25/2015 2:28:15 PM
மலேசியாவின் சுற்றுலா சிறப்பை தந்த நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றி.
Name : T.R Rajkumar Date :6/7/2014 3:31:30 PM
உலகையே சுற்றிப்பார்ப்பதும், மலேசியாவை சுற்றிப்பார்ப்பதும் சமமாக கருதலாம். நீங்களும் ஒரு தடவை மலேசியா சென்று வரவும். நக்கீரன் அவர்களுக்கும் நன்றி.
Name : Siddique Date :8/28/2013 3:12:41 PM
மலேசியா என்றாலே நல்ல சுத்த உணவுகள் .
Name : D.RAJESH Date :8/1/2013 12:22:23 PM
நன்றாக உள்ளது இரட்டை கோபுரங்கள் என்பது எப்போது பெரகேன்ர இரட்டை குழைந்தை போல் இருகின்றது அதை கட்டியவர்களுக்கு நன்றி. எது போல் செய்திகளை எங்களுக்கு அனுப்பும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றி.
Name : D.RAJESH Date :8/1/2013 12:20:38 PM
நன்றாக உள்ளது இரட்டை கோபுரங்கள் என்பது எப்போது பெரகேன்ர இரட்டை குழைந்தை போல் இருகின்றது அதை கட்டியவர்களுக்கு நன்றி. எது போல் செய்திகளை எங்களுக்கு அனுப்பும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றி.
Name : Tina Date :4/7/2013 5:53:50 AM
Thinking like that is rlealy impressive