நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 உலகைச் சுற்றுவோம்…உள்ளம் களிப்போம்…

- கோவி . லெனின்

வேலைக்காக செல்வதே வெளிநாடு என்றிருந்த நிலைமை இப்போது மாறிக் கொண்டிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வேலைகளை உள்நாட்டிலேயே அவுட்சோர்ஸிங் என்கிற அயல்பணி மூலமாகப் பார்க்க முடிகிறது. உள்நாட்டில் கிடைக்கும் ஊதியத்தைவிட கூடுதலான ஊதியம் கிடைக்கிறது. தொழில்வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. அதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதென்பது சமீபகாலமாக அதிகரித்தபடியே இருக்கிறது.தமிழர்களின் வெளிநாட்டுப் பயணம் என்றால் முதல் சாய்ஸ், சிங்கப்பூர்-மலேசியா நாடுகள்தான். தமிழினத்தின் வேர்கள் இங்கே இருப்பதால் எளிதாக இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அதற்கேற்ற வகையில் டூர் பேக்கேஜ்களுடன் சுற்றுலா நிறுவனங்கள் வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் அழகை அனுபவிப்பதுடன், 
   www.haihoi.com        
 அங்குள்ள சந்தைகளில் விலைகுறைவாகக் கிடைக்கக் கூடிய தரமான பொருட்களையும் சுற்றுலாப்பயணிகளால் வாங்கி வரமுடிகிறது.

 அண்மைக்காலமாக தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. பொழுதுபோக்கின் சொர்க்கலோகமாக விளங்கும் இந்தநாட்டிற்கான சுற்றுலா பேக்கேஜ்களும் குறைந்த கட்டணத்தில் உள்ளன. துபாய்க்கு சுற்றுலா செல்வதையும் தமிழர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அங்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதுடன், தங்கநகைகள் உள்ளிட்ட பொருட்களை நியாயமான  அளவில் குறைந்த  விலைக்கு வாங்க முடியும் என்பதும் இந்த சுற்றுலா ஆர்வத்திற்குக் காரணமாகும். 

குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணங்களை  மேற்கொள்வதும் அதிகரித்து வருகிறது. ஓரளவு வசதியுள்ளவர்களும், வேலைசெய்யும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பயணத்திட்டத்தின்கீழ் பயன் பெறுபவர்களும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதுபோல ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்கா-கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. தமிழர்கள் நிறைந்து வாழும் நாடுகளான மொரிஷீயஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல சலுகைகளை அளிக்கின்றன. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் பொன்மொழி. இன்று உள்நாட்டில் திரவியம் எனும் செல்வத்தைத் தேடி அதை திரைக்கடல் தாண்டியுள்ள நாடுகளில் பயனுள்ள வகையில் செலவழிக்கத் தமிழர்கள் கற்றுக் கொண்டார்கள். உலகத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும்போதுதான் நம்முடைய வாழ்க்கைமுறைக்கும் உலகத்தின் போக்கிற்குமான வேறுபாடுகள் உணரப்படுகின்றன. பலவிதமான மக்கள், பலவிதமான மொழிகள் ஆகியவற்றைக் காணும்போது உலகில் யாரும் எப்படியும் வாழமுடியும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் ஏற்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்பாடலின் அர்த்தம் புரிகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : D.RAJESH Date :8/1/2013 12:42:22 PM
சாய் கோபுரம் கேள் கொடுக்கப்பட்ட தமிழ் வரிகள் நன்றாக உள்ளது.நாம் எப்பெடிஉம் valamudium என்ற நம்பிகை வரும் என்று சொன்ன கருத்துக்கு நன்றி. அம