நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 




மூலிகை வைத்தியங்களை சித்தர்கள் அருளியதால் அதை சித்த வைத்தியம் என்பார்கள். காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் காடுகளில் உள்ள தாவரங்கள் மூலம் மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கான மருந்துக்களை கண்டறிந்து தந்தார்கள். தீர்க்க முடியாத நோய்கள், விஷ முறிவு மருந்துகள் என பலவற்றை கண்டறிந்து தந்தார்கள். அவை பற்றி ஓலைச்சுவடிகளில் குறிப்புகள் எழுதியும் வைத்திருந்தனர்.



 அதை நாம் பாதுகாக்காமல் விட்டதாலும், ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தால் மூலிகை மருத்துவத்தை மறக்கடித்து விட்டோம்.  இருந்தும் கேரளா போன்ற மாநிலங்களில் இன்றளவும் இயற்கை வைத்தியத்துக்கும், மூலிகை மருத்துவத்துக்கும் பெரும் வரவேற்பு உள்ளது. கேரளாவில் இயற்கையே மருந்தாக செயல்படுகிறது. மூலிகைகள் நிறைந்த ஒரு மாநிலமாக அது உள்ளது.

சௌபர்னிகா ஆறு

நடிகர் எம்.ஜி.ஆர் மூலமாக தமிழகத்தில் பிரபலமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் நிச்சயம் சௌபர்னிகா ஆற்றை பற்றி அறிந்திருப்பார்கள். அந்த ஆற்றில் குளித்து விட்டுதான் பக்தர்கள் அக்கோயிலுக்கு தரிசனத்துக்கு செல்வார்கள். 

கொல்லூர் மூகாம்பிகா கோயில் அமைந்துள்ள இடத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் ஓடுகிறது சௌபர்னிக்கா ஆறு. 

கருடன் தனது தயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க கொல்லூர் வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என அம்பாளை தவம் புரிந்துள்ளார். மூகாம்பிகையம்மன் தவத்தை ஏற்றுக்கொண்டு மூலிகைகள் நிரம்பிய கொடச்சாத்திரி மலையின் உச்சியில் இருந்து ஆறு ஒன்று உற்பத்தியாகும்படி செய்தார். கொடச்சாத்திரி மலை புராண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது அதிலிருந்து விழுந்த ஒரு பகுதியே கொடச்சாத்திரி மலை என கூறப்படுகிறது. அந்த மலை மூலிகைகள் நிரம்பிய மலை. மனிதர்கள் வாழாத, அவர்களின் காலடி தடம் இன்றளவும் அதிகம் பாடாத மலையது. 



இந்த மலையின் உச்சியில் இருந்து உற்பத்தியாகும்படி செய்தால் அம்பாள். மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் நீர் 64 மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் கலந்து உள்ளதாக கூறப்படுகிறது. இயற்கை மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்த கொடச்சாத்திரி மலையில் கணபதிகுகை, சர்வஞபீடம், சித்திரமூலைகுகை போன்றவை உள்ளன. இங்கு தங்கி ஆதிசங்கரர், கோலமகரிஷி போன்றோர் தவம் செய்ததாகவும் அப்போது அவர்கள் இந்த மலையில் வீசும் மூலிகை காற்றும், மூலிகை நீரும் அவர்களை திடகாத்திரமாக, நோய் நொடி அண்டாமல் வைத்திருந்தாக கூறப்படுகிறது. 

மலை உச்சியில் இருந்து இரண்டு கனவாய் வழியாக 25 கி.மீ தூரம் வலைந்து நெளிந்து மலையில் பயணித்து மலை அடிவாரத்தில் உள்ள கொல்லப்புரா என்கறி கொல்லூர்க்கு வருகிறது. சௌபர்ணிகா ஆறு ஓடும் பகுதியில் மக்கள் குளிக்க வேண்டும் என்பதற்காக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் கரைகளில் காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரிக்கு சந்நதி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு இடையே தான் பாய்ந்தோடுகிறது சௌபர்னிகா. 



100 அடி அகலத்துக்கு உள்ளது ஆற்றின் அகலம். மூலிகைகள் கலந்து வரும் தூய்மையான, மருத்துவ குணம் கொண்ட குளிர்ந்த நீரில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும், உள்ளமும், உடலும் தூய்மையாகும் என்பது புராண காலம் முதல் தற்போது வரை பக்தர்களிடம் உள்ள நம்பிக்கை. இந்த ஆற்றில் கோடைகாலத்திலும் நீர் வற்றாமல் ஓடுகிறது. அதேபோல் எவ்வளவு நேரம் குளித்தாலும் சளி பிடிப்பதில்லை. 

கொல்லூரை கடந்தபின் இந்த ஆறு சம்பாரா என அழைக்கப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்க செல்பவர்கள் இந்த ஆற்றில் ஒரு குளியல் போட்டால் உடல் மற்றும் உள்ளம் தூய்மையாகும். 

வழித்தடம் :

சென்னையில் இருந்து இரயில் மூலம் மங்களுர் சென்றால் அங்கிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லூர். மங்களுரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. கோவையில் இருந்து நேரடியாக இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. தங்குவதற்கு பல விடுதிகள் உள்ளன. 


- ராஜ்ப்ரியன்










தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : FHHH Date :6/14/2015 3:01:40 PM
சூப்பர் ஊர்
Name : FHHH Date :6/14/2015 2:42:29 PM
சூப்பர் ஊர்
Name : MOHAMMED Date :3/22/2015 5:19:40 PM
நல்ல அருமையான தகவல் வாழ்த்துக்கள்.
Name : AROOR ANBU THAMBI Date :5/28/2014 11:29:59 AM
மருத்துவ சுற்றுலா தகவலுக்கு மிக்க நன்றி ....
Name : kothandaraman Date :5/21/2013 1:48:54 PM
வெரி குட் information
Name : Edgar Date :4/6/2013 11:16:03 AM
It's great to read something that's both enjoyable and provides pamrgatisdc solutions.
Name : RAJA Date :4/2/2013 12:00:07 AM
நல்ல எடம்