நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
   மகாத்மா காந்தியடிகளுக்கும், மதுரைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.   1921ம் ஆண்டு காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றி குளிரில் வாடுவதை கண்டார். 
கோவணத்துடன் இருந்த ஏழை விவசாயியைக் கண்டார். அன்று இரவே,   நாட்டில் இப்படியும் மக்கள் இருக்க,  தனக்கு மட்டும் ஏன் இந்த் ஆடம்பரம் என்று தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் மகாத்மா.

அந்த மகாத்மாவின் மறைவுக்கு பின்னர், நாட்டின் சில பகுதிகளில் காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. அப்படி தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று மதுரை.1957ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால், மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது.
சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள  இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்கு காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றை படம்பிடித்து காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


இந்த மியூசியத்தை காண ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டினர் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். காந்தி மியூசியம் திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை. (எல்லா நாட்களும்) தொலைபேசி - 0452- 2531060.


அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை. (ஒவ்வொருமாதமும் 2வது சனிக்கிழமை மட்டும் விடுமுறை) தொலைபேசி - 0452 -2650298.வழித்தடம் :

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உண்டு.  ரயில் வசதியும் உள்ளது.  மதுரையில் விமான நிலையம் உள்ளது.   மதுரையில்  இருந்து சென்னை செல்லும் சாலையில் காந்தி மியூசியம் அமைந்துள்ளது.  தல்லாகுளம் தந்தி அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும்,  நடந்து செல்லும் தூரத்திலேயே மியூசியம் உள்ளது.


  
  


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Nagarethinam Date :4/15/2014 6:44:28 AM
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி.