நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 தமிழ் இலக்கியத்தின் இரட்டைக்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - மணிமேகலை.  சிலப்பதிகாரத்தின் நாயகன் - நாயகி வாழ்ந்த ஊர் பூம்புகார்.


சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. சோழர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுக நகரமாக இருந்த பூம்பூகாருக்கு தமிழ் இலக்கியத்தில் தனி இடமுண்டு. கண்ணகி பிறந்து வளர்ந்து கோவலனுடன் சேர்ந்து வாழ்ந்த சிறப்பை,   சிலப்பதிகாரம் இந்த ஊரின் மூலமாகத்தான் சொல்லிச் செல்கிறது.


சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை இப்போது பார்த்தாலும் கண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பு. காவிரி நதி  இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது பூம்புகார்.    இப்பூம்புகார் கடற்கரை நகரில் விளக்குத்தூண், கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.  கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலை அமைந்துள்ளது.


 இலஞ்சி மன்றத்தில் பண்டைய கால வரலாற்றில் இங்கே குளம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. அவற்றை நினைவு கொள்ளும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூன்று கட்டிட அமைப்புகள் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது.


இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் உள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்துள்ளன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கபெற்று கண்கவர் காட்சியாய் அமைந்துள்ளது.
 
சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், 3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் கல்லில் வடிவமைக்கப்படுள்ளன.
 
பூம்புகாரில் கடலடி அருங்காட்சியகம் உள்ளது.   இது தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையின் அருங்காட்சியகம் ஆகும். இது 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு பெற்றுள்ளது.இந்த அருங்காட்சியகத்தில் சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாத உருவாரம், பெருங்கல் மணிகள், ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்கலைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீன ஜாடிகள், பிரித்தானிய குளிர் ஜாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வழித்தடம் :

 சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.

 சென்னை - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் - சீர்காழி - கருவி - பூம்புகார்.படங்கள் : செல்வகுமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : M.Abdul Aleem Date :3/10/2014 10:49:21 PM
பெண்ணினின் பெருமையை உணர்த்தும் ஒரு வரலாறுதான் பூம்புகார் .
Name : Kavignan Elara Date :4/16/2013 5:51:00 PM
நம்முடைய தமிழர் வரலாற்று சின்னங்களை, தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரத்தை இன்றும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான இடம் தான் பூம்புகார்.