நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 



உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். இங்கு அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை.



பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி. பருமன் இரண்டரை அடி. தேரின் உயரம் 101 அடி. அதன் மேலுள்ள கலசம் 5 அடி. தேரின் அடித்தள அடுக்கில் நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட குறள்களின் விளக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கருவறை, தரையிலிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. 10 அடி அகலத்தில் எண்கோண வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

தோரண வாயில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் ஏதுமில்லாத அரங்கத்தின் நீளம் 220 அடி; அகலம், 100 அடி. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்று. 4,000 பேர் வரை அமரலாம். அரங்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. மேல் மாடியில் மைய மாடமாக ஒரு தாழ்வாரம் உள்ளது. அது, குறள் மணிமாடம்.


குறள் மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன.


திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நீர்நிலைகள் உள்ளன. அவை, கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் பிம்பங்களைக் காணும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



வழித்தடம் :
சென்னை மாநகரத்தின்  மத்திய சென்னையில் அமைந்துள்ளது வள்ளுவர் கோட்டம்.   பரபரப்பான சாலையை ஒட்டி இக்கோட்டம் அமைந்திருப்பதால் 5 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் மற்றும் சேர் ஆட்டோ வசதி உள்ளது.
 









தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :