நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


 

குறளால் தமிழுக்குப் பெருமை சேர்த்த வள்ளுவருக்கு குமரியில் பிரம்மாண்ட சிலை அமைந்திருக்கிறது.  வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும், அரபிக் கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில்  அலைகடலில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரம் கொண்டது இந்த சிலை.  சிலையைத் தாங்கும் பீடம் மட்டும் 38 அடி, சிலை 95 அடி என மொத்தம் 133 அடி உயரம்.   இந்த 38 அடி உயர பீடம் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், 95 அடி உயர் சிலை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கிறது.  அதாவது அறத்தை அடித்தளமாக கொண்டே பொருளும் இன்பமும் அமையவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


1979 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல அரசியல் பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச்சிறந்த கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 1999ஆம் நிறைவு பெற்றது.  சிறுதாமூர் , பட்டுமலைக்குப்பம், அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு இந்த சிலை உருவாக்கப்பட்டது. 

இந்த பிரம்மாண்ட சிலையின் மொத்த எடை 7000 டன்.  தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள், சிலைகள் போன்றவறை என்றுமே பெரிதாக, பிரமாண்டமாக உருவாக்கப்படுவது உண்டு. அதைப் போலவே திருவள்ளுவர் சிலையும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் கம்பீரத்துடன் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.

 நடுக்கடலில் ஒரு சிறிய தீவில் இந்த சிலை அமைந்துள்ளமையால் இந்த சிலையை அருகில் சென்று காண சுற்றுலாத் துறையின் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன.காலம் சென்ற கணபதி ஸ்தபதியின் திறமையாலும் அனுபவத்தாலும்  மேலும் எத்தகைய பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் செதுக்கப்பட்டமையால் சுனாமியின் தாக்கத்தையும் எதிர்த்து இன்று வரை  நிலையாய் இருக்கிறது இந்த சிலை.

வழித்தடம்:

 கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.  கன்னியாகுமரியில் ரயில் நிலையம் உண்டு. 80 கிலோ மீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் வி
மான நிலையம் உள்ளது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :