நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


சொர்க்கம் உங்கள் பக்கத்தில்-ஏற்காடு ஏக்கம்!


நூறு ரூபாய் பணமும் 'நடை' போட ஆசையும் இருந்தால் இதோ உங்கள் இதயத்தோடு இதயமாக இணைந்துவிடும்- ஏற்காடு.


ஆம் பாக்கட்டுக்குள் இருக்கும் பணத்தை பதம் பார்க்காத பசுமை நிறைந்த மலை-ஏற்காடு. அதனால் தான் 'ஏழைகளின் ஊட்டி' என அன்போடு அழைக்கப்படுகிறது நம்ம ஏற்காடு.

சரி இனி ஏற்காடுக்குள்ள நுழையலாமா!!!

பருவ வயதுகாரனின் பார்வையை விரிய வைக்கும் வனப்பு அதன் உயரம்.  அழகிய பெண்ணின்  உருவம் அதன் அழகு. அவள் கூந்தலை போல பறந்து விரிந்து அலங்கரிக்கும் பசுமை, அதன் கொண்டையை சிங்காரிக்கும் 20 கொண்டை ஊசி வளைவுகள், வள்ளுவர் வர்ணித்த மெல்லிய இடையால் போன்ற வளைவுகள் இதை ரசித்தபடியே அடிவாரத்தில் இருந்து 22 கி.மீ பயணித்தால்  உயரத்தில் இருக்கும் அழகிய ஏற்காடு நகரத்தை அடைந்தோம்..  சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 29 கி.மீ மட்டுமே. வெகு அருகில் மாநகரத்தை ஒட்டியே இருப்பது இதன் சிறப்பம்சம் என்றால் இவளின் (செல்லமா தான் சொல்றேங்கோ) காதல் விளையாட்டுகளை காண்பது சிறப்போ சிறப்பு. பசுமை போர்த்திய வனப்பு மிகுந்த மலையின் மேல் மோகம் கொண்டு பனி மேகம் உரசி மெது மெதுவாய் வேகத்தை கூட்டி மோகத்(தீயை)தை படர இந்த காதல் விளையாட்டை பார்க்கும் நமக்கே வெட்கம் வந்துவிடும். இது பேரானந்தம். இந்த அழகிய காதலை தான் ஆங்கிலத்தில் 'மிஸ்ட்'  என வர்ணிக்கின்றனர்.

நம்ம ஏற்காட்டு மங்கைக்கு இருக்குற ஒரே பிரச்சனை என்னன்னா ஆவுனா மேகத்திற்கு கண்ணசைவை  காட்டிவிடுவாள். அப்புறமென்ன அடிக்கடி விளையாட்டு தான். வெயில் காலம் என்றாலும் இவர்கள் படர்த்தல் மட்டும் குறைந்ததே இல்லை. சேலம் வெப்பம் நிறைந்த மாவட்டம் என்பதால் யாரும் வெப்பம் தணிக்க இங்க வந்துடலாம். சேலத்தில் இருந்து வெறும் 17 ரூபாய் தான் பேருந்து கட்டணம். 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து உள்ளது. மேலே ஏற்காட்டில் 25 ரூபாய்க்கு நல்ல உணவு கிடைக்கிறது அப்புறமென்ன சுகர், உப்பு, கொழுப்பு ஏதும் அண்டகூடாது என நினைத்து நடை போட்டால் எல்லா சுற்றுலா பகுதிகளும் எட்டிவிடும் தூரம் தான்.நூறு ரூபாயில் செலவு முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம், இவள் ஏழைகளின் அரசி என வர்ணிக்க.

அதுக்காக வசதி படைத்தோர் பணத்தை இறைக்க வாய்ப்பில்லையா? என கருத வேணாம். அதற்க்கும் இங்கு வழி உண்டு அறுநூறு ரூபாய் தொடங்கி ஆறாயிரம் வரை ஒருநாள் வாடகை தருமளவு தங்கும் லாட்ஜுகள் உண்டு. பெரிய நட்சத்திர ஹோட்டல்களும் உண்டு.


800 ரூபாய் கொடுத்தால் ஏற்காட்டில் உள்ள அத்தனை இடங்களையும் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சுற்றி காட்டிவிட்டு வருவர் ஏற்காடு ஏரி அருகேயே உள்ள ட்ராவல்ஸ் ஓட்டுனர்கள். வெளியூர்ல இருந்து வர்றவங்களுக்கு சேலத்தில் உறவுகள் இருந்தால் அவர்கள் பைக்கை வாங்கிகொண்டு கூட ஏற்காடு பவனி வரலாம். ரெண்டு லிட்டர் பெட்ரோலில் ஒட்டுமொத்த அழகையும் கண்களில் உள்வாங்கி இதயத்தில் சேவ் பண்ணி வச்சுக்கலாம். நான் இப்போ பைக் ல தான் போறேன். வரிங்களா அப்படியே என்னோடவே சேர்ந்துகுறீங்களா?!!

பெரிய மின் கோபுரமும் அதன் கீழே உள்ள அண்ணா சிலையும் ஏற்காடு நகரத்தின் முகப்பாய் இருந்து நம்மை வரவேற்றது.

மெல்லிய இலை மேல் படர்ந்த பனி துளி போல பூமி பந்தின் மீது நீர் படர்ந்து 'ஏரி பூங்கா'வாக இருக்க அதில் கன்னி பெண்ணை தழுவி செல்லும் தென்றல் காற்றை போல் ஊர்ந்து சென்றது படகுகள்.
ஆம் அங்கேயே 'படகு இல்லம்' இருந்தது. பெரியவருக்கு 120 ரூபாய் தான் படகு சவாரி செய்ய. அப்படியே சவாரியை முடித்துவிட்டு அருகில் இருந்த அண்ணா பூங்காவிற்குள் நுழைந்தோம்.சிறியவர் பெரியவர் என அனைவரும் சறுக்கல் தரையில் சர்கேஸ் விட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டு இருக்க அதை ரசிக்க ரசிக்கவே பசி வயிற்ரை கிள்ள 'நல்ல ஆனால் குறைந்த விலையில் ஒரு ஹோட்டல் இருந்தா சொல்லுங்க' என்றோம் பஜ்ஜி கடை பாட்டியிடம். 'நல்லாவும் இருக்கனும் காசு கொறைவாவும் இருக்கணும் அப்படினா நம்ம பெருமாளு நடத்துற 'தம்பி பிரபாகரன்' கடைக்கு போங்க...' என அருகிலேயே இருந்த ஹோட்டலிற்கு மன்னிக்கவும்  'உணவகத்திற்கு' வழிகாட்ட நுழைந்தோம்.
வாசலிலேயே 'பிரபாகரன்' படம் போட்ட கம்பீரம் உள்ளே அழைக்க, உள்ளேயோ 'பெரியார், அம்பேத்கர், புத்தர், திருவள்ளுவர்' பொன்மொழிகள் கடை முழுக்க ஒட்டி வைக்கப்பட்டு இருக்க படித்துகொண்டு இருக்கும்போதே சுட சுட சோறு வைக்கப்பட்டது. சைவமும் இருந்தாலும் எண்ணையில் நல்லா பொரிக்க வைத்து செவ செவனு மிணிக்கிட்டு இருந்தத பார்த்ததுக்கப் புறமும் சைவத்துல சாப்பிடமுடியுமா?! செவப்பிய வாங்கி மட்டன், சிக்கன் கொழம்பு மிக்ஸ் செய்து முல்லு படாமல்  முதல் மரியாதை சிவாஜி சார் போல மீனை முழுங்கினோம்.அட ஆமாங்க அந்த செவப்பி 'கெண்டை மீனு' தான்.


திருப்தியா சாப்பிட்டு விட்டு லேடீஸ் சீட் புறப்பட .அங்கிருந்து மூணாவது கி.மீ இல் அதை அடைந்தோம். அங்கே இருந்த டெலஸ்கோப்பில் கீழே சேலத்தில் உள்ள மேட்டூர் டேம், டால்மியா, என அனைத்தையும் கண்ணருகே கொண்டு வந்து பார்த்தோம் செம அழகு. அருகிலேயே இருந்த ஜென்ட்ஸ் சீட் போக அங்கே இருந்து பசுமை நிறைந்த மலையை பார்க்க அழகிய கியூட் கவிதையாய் காட்சி தந்தது. நல்ல வியூ பாயின்ட்.
கொஞ்ச(ம்) சென்றோம்.. அங்கே புதியதாய் திறக்கப்பட்ட (அக் 15 இல் திறந்தனர்) தாவர பூங்காவிற்குள் நுழைந்தோம். 'தம்பி ஏற்காட்டில் இது புது இடம் வாங்க வாங்க 'என நுழைவு சீட்டை தந்து ரூ 20  பெற்றுக்கொண்ட பெண்மணி 'இது முழுக்க தாவரங்கள் உள்ள பூங்கா இங்க உட்கார்ந்து அதை ரசிக்கலாம் முக்கால்வாசி வேலை முடிந்துவிட்டது' என கூற அவர் சொன்னதன் போலவே ரம்மியமாய் இருந்தது புதிய தாவர பூங்கா. அருகே உயரத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று 'தோழரே நீங்கள்தான் எங்கள் தமிழ் சமூகத்தின் மூத்த குடி முருகு என்றால் அழகு அந்த அழகை தான் இந்த ஏற்காடு சுமந்து இருக்கிறதே' என கொஞ்சம் பேசிவிட்டு அங்கிருந்து நடந்தே ரோஜா தோட்டம் நுழைந்தோம். ஆர்.கே செல்வமணியின் தோட்டம் கிடையாதுங்க நம்ம அரசாங்கத்து தோட்டம் தான்.சிவப்பு, மஞ்சள் என எங்கும் வண்ண வண்ண மலர்கள்...உயர்ந்த உயர்ந்த மரங்கள் என பசுமையில் ஓர் பசுமை. நிறைய தாவிரங்கள் அங்கு விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது அறிய வகை தாவிரங்களாம்.

பல நாட்டு மலர்களும், பெரும்பாலும் நம் நாட்டு மலர்களும் அங்கே வைக்கப்பட்டு இருக்க மங்கை கூந்தலில் மலர்கள் ஏற்காடு மங்கை கூந்தலில் மலர்கள்.'வாங்க சார் வாங்க சந்தானத்த அஜித் ஆக்குவோம், கோவை சரளாவ ஹன்சிகா ஆக்குவோம் எங்ககிட்ட படம் எடுத்துகோங்க ஒரே நிமிஷத்தில் படம் உங்கள் கையில். நாற்பது ரூபாய் தான்'என கேமராவும் கையுமாக சில இளைஞர்கள் படம் எடுக்க காத்திருந்தனர். அவர்கள் உழைப்பு வீண் போக கூடாது என நாமும் நாற்பது ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு படம் பிடித்து உடனே பெற்றுகொண்டோம் நம்மை போலவே பலரும் படம் பிடித்துகொண்டனர். ஜோடியாக, பூக்களோடு சேர்ந்து என விதவிதமாய். வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு வசதியாக இருந்தது.அடுத்து அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில் நுழைந்தால் ஊஞ்சல் இருக்கும் இடமெல்லாம் குழந்தைகளுக்கு பதில் பெரியவர்கள். பசுமையும்,அந்த சூழலும் பெரியவர்களையும் குழந்தைகளாக்கிவிட்டது.நாமும் ஊஞ்சல் ஆடிவிட்டு அப்படியே ஏழு கி.மீ தள்ளி மலை உச்சியில் உள்ள சேர்வராய் கோயிலுக்கு பயணித்தோம். சக்தி வாய்ந்த மலை சாமியாம். சுற்றியும் திறந்த வெளி என அழகிய கோயிலாய் காட்சி தந்தது.அந்த சாமியை பார்த்து ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கி பயணித்தோம். ஏற்காடு பேருந்து நிலையம் அடைந்தோம். அங்கே புடவை களைந்த. ரொம்ப கற்பனை வேண்டாம் புடவை களைந்த ஒரு துணிக்கடை பொம்மை போல் உரித்து வைக்கப்பட்டு மஞ்சளும் 'பச்சையுமாய்' மினிக்கி இருந்தது மாங்காய். மூணு ரூபாய் கொடுத்து அந்த கீற்றை வாங்கி சுவைத்தோம் மிளகாய் உப்பு போட்டு. 'இது இங்கேயே விளைஞ்ச மாங்காய்கள் மூலிகை கலந்தது' என்றார் அந்த கடைக்கார பாட்டி சுவைத்தது மாங்காவும் அவர் பேச்சும்.

இன்னும் கொஞ்சம் வாங்கிகொண்டு அங்கிருந்து எதிர் திசையில் மூணு கி.மீ இல் உள்ள கிள்ளியூர் அருவிக்கு சென்றோம் உயர்ந்த இடத்தில இருந்து அருவி நீர்தாரகைகள் கொட்ட அவை நம் மீது பட்டு தெறிக்க (இங்கு மனைவி,காதலி  என யாரையும் சேர்த்துகொள்ளலாம்) தத்தி தத்தி பேசிய பேச்சின் இடையில் உதடுகளில் பட்டு தெறித்த குழந்தைகளின் எச்சில் துளி சுகம்.இவைகளை ரசிக்க ரசிக்கவே அந்தி சாய தொடங்கிவிட்டது...இன்னும் போட்டானிக்கள் கார்டன், மான்போர்ட் பள்ளி என பல இடங்கள் உள்ளன. இந்த பள்ளியில் தான் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் படித்தார்கள் என்பது கூடுதல் தகவல்.

திரும்பிய நம்மை மீண்டும் மீண்டும் வாருங்கள் என்பதாக இருந்தது வழிநெடுக இருந்த  நம் முன்னோர்களின் (குரங்குகள்) அணிவரிசை.ஏற்காடு என்றாலே அதிகம் வியாபாரத்தளம் ஆகாத பசுமை பிரதேசம் எனலாம்.. அமைதி, பசுமை, ரம்மியமான சூழல் என தனிமை விரும்பி செல்பவர்களுக்கு ஏற்காடு ஒரு சொர்கபுரி தான்.அதுவும் குறைந்த செலவில் கிடைத்த சொர்கபுரி.

நக்கீரன் இணையதளத்தில்  இதயம் லயிக்கும் உள்நாட்டு,வெளிநாட்டு வாசகர்களே!!

சொர்கத்தை மண்ணிலேயே காண கிளம்பிவிட்டீரா?!!!!

ஆம்!

நூறு ரூபாய் பணமும் 'நடை' போட ஆசையும் இருந்தால் இதோ சொர்க்கம் உங்கள் பக்கத்தில்....

பயணம்:இளங்கோவன்
படங்கள்:தமிழ்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [27]
Name : பாஸ்கரன் Date :6/13/2016 5:57:49 AM
நா முதன்முதல்ல (+2)நண்பர்களோட சுற்றுலா போனது ஏற்காட்டுக்குதான்.. அதனாலயோ என்னவோ பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிடுச்சி.. மனசு சரியில்லனாலோ கல்லூரிக்கு போக விருப்பமில்லனாலோ நா உடனே ஏற்காடு போய்டுவேன்.. நண்பர் சொன்னமாதிரி ஏற்காடு காதலிமாதிரி. அவள பாக்க 75மைல்கள் கிளம்பிடுவேன். இருந்தாலும் ஏற்காட்டபத்தி படிக்றப்போ ஒரு நல்ல புதூ அனுபவம்.. நன்றி
Name : karthikeyan Date :1/26/2016 4:53:42 PM
//வாங்க சார் வாங்க சந்தானத்த அஜித் ஆக்குவோம்// - எனக்கு அஜீத்தைவிட சந்தானமே நல்லா இருக்கிறார் என்று தோன்றுகிறது.
Name : நிலாமுதீன் Date :1/23/2016 7:06:59 PM
ஏற்காட்டின் எழில் கொஞ்சும் அழகினை ரசிக்கும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கும் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம்
Name : மோகன் Date :1/6/2016 8:26:50 AM
வணக்கம் ஐயா . கட்டுரையும் விமர்சனமும் அபாரம். நான் ஆஸ்திரேலியாவில் வசிப்பவன். உங்களின் இந்த விமரிசனத்தைப் படித்தவுடன் ஏற்காட்டுக்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் தலைக்கேறி இருக்கிறது. இப்படிப்பட்ட பயணத்தை நீங்கள் ஏற்பாடு செய்வதுண்டா? அல்லது நாங்களே சொந்தமாக செல்வதா? இப்படிப் பட்ட விவரங்களையும் சேர்த்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். இனியும் சேர்க்கலாமே. நன்றி வாழ்க வளமுடன். அன்பன் மோஹன்
Name : G.muthubharathi Date :12/23/2015 12:12:52 PM
வெரி சுப்பர்
Name : mcouppane Date :9/15/2015 6:10:14 PM
அருமை
Name : K Karunanidhi Date :6/18/2015 6:51:08 PM
என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர் குடும்பமும் சென்ற மாதம் Yercaud வந்திருந்தோம். எழில் கொஞ்சிய இயற்கை காட்சிகள். குறைவில்லா வசதி hotel. There is no rest room in Rose Garden Area & in most of the common places. There was one but kept under lock & key due to water shortage... Rest all good.
Name : balutfo Date :5/22/2015 10:51:42 AM
நன்றி நன்றி நன்றி
Name : arumugam Date :4/14/2015 10:06:08 AM
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அருமையான இயற்கை காட்சிகள்
Name : S.Deva Date :11/29/2014 11:20:17 PM
சூப்பரா இருக்கு அருமையான காச்சி god plus you
Name : Ramaral Ramanaidu Date :10/13/2014 4:29:22 PM
சேலம் வந்தும், ஏற்காடு செல்லாமல் திரும்பி விட்டேன். இந்த கட்டுரையைப் படித்தப் பின்னர் மீண்டும் வர வேண்டுமென்ற ஆவல் என்னைத் தூண்டுகிறது. நிச்சயம் வருவேன். இயற்கை எழிலை அனுபவிப்பேன்.
Name : razak sahib Date :4/18/2014 11:05:46 AM
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அருமையான இயற்கை காட்சிகள்
Name : Arif Date :4/13/2014 12:59:07 PM
THere is no proper toilet feature and other facility in the city and it's not well maintained city like ooty and Kodai.
Name : Devendran Date :4/7/2014 3:26:45 PM
ஐயா, மிக அற்புதம் எனக்கு ஊட்டி பற்றிய தகவல்கள் தர முடியுமா?
Name : inayathulla Date :4/1/2014 10:00:48 AM
நல்ல அழகான படங்கள் கண்களுக்கு விருதுஅமைதியான ஒரு இயற்கை அழகு
Name : a.c.balakrishnan Date :3/21/2014 8:38:21 AM
நல்ல அழகான படங்கள் கண்களுக்கு விருது
Name : mohan Date :9/8/2013 12:18:33 PM
ஹலோ சார் இ வாட்ச் தி பெஔதிபுல் லோகாதியன் இ வில் கம் தி திஸ் பழசே பட் நாட் தி மோனே ப்ரொப்லெம் பல் உ செண்ட் தி மோனே அபிடேர் இ வில் கம் மி அக்கௌன்ட் நோ 3264897589523 சவுத் இந்தியன் bank
Name : mohan.k Date :9/2/2013 5:43:19 PM
அமைதியான ஒரு இயற்கை அழகு
Name : srinivasan Date :8/12/2013 11:44:54 AM
its wonderful place.....
Name : D.RAJESH Date :8/1/2013 12:07:26 PM
ஏற்காடு பார்பதற்கு மிகும் நன்றாக உள்ளது ஏழைகளை சந்தொசபடுதுகின்ர ஒரு சின்ன சொர்க்கம்.
Name : A. Esther Mary Date :7/17/2013 2:46:06 PM
vov சூப்பர் ஏற்காடு பார்த்த சந்தோசம். இது மிகவும் பிரயோசனமானது. நன்றி நக்கீரன்.
Name : gunasekaranraj Date :7/5/2013 8:08:22 PM
மிகவும் அழகான போட்டிங் ரம்யமான சுழ்நிலையில் அமைந்துள்ளது . இறைவன் கொடுத்தது . சுற்றுலா செல்பவர்கள் அசுத்தம் ,மாசுபடாமல் இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடுமலை பாதுகாப்போம் . துணைபுரிவோம் .
Name : vicky Date :6/18/2013 4:32:01 PM
வெரி குட், குட் டீம் வொர்க் இ லைக் இட்
Name : rajkumar Date :6/13/2013 8:29:07 AM
கண்முன் ஏற்காடு கொண்டு வந்திர்கள் ,அதற்காக நன்றி . மீன் அருமையாக இருந்தது ,,,,,,,,,,,,,,,,,,,,,,
Name : Hiroshi Date :6/13/2013 3:56:21 AM
Pleasing you should think of smoehting like that
Name : Dora Date :6/13/2013 1:26:02 AM
Enlightening the world, one hlpeful article at a time.
Name : gopinath Date :5/28/2013 11:48:43 PM
நன்றாக இருக்கிறது yercaud பற்றிய தகவல்கள்