நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு என்றால்
பாமரனின் பார்க் எங்கள் கல்வராயன்மலை!         லையில் உள்ள இயற்கை எழிலான தோற்றங்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. அங்கே காட்டுச் செடிகள் அதன் பூக்கள் கூட கவர்ந்து இழுக்கும். மலையின் ஏற்ற இறக்கங்கள், முகடுகள் அதன் சிகரங்கள் பார்க்கும்போது கோபுரமாக - யானையாக இப்படி பல உருவத் தோற்றங்களை கற்ப்பனையாக காட்டும் மலைமீது படிந்துள்ள பசுமையின் அழகுக்கு ஈடில்லை எதுவும். எனவே தான் பணக்காரர்கள் முதல் பாமரன் வரை ஊட்டி கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், கொல்லிமலை, ஜவ்வாது மலை, பச்சை மலை என மலைமகளை பார்த்து ரசிக்க கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு செல்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களை சுண்டி இழுக்க கூடிய வகையில் அமைந்துள்ளது எங்கள் கல்வராயன் மலை என்கிறார்கள் அம்மலை மக்கள்.கல்வராயன் மலை கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை, தெற்கே மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக்கொண்டுள்ளது இம்மலை. இதற்குள் எத்தனை அழகு உள்து என்பதை பார்த்தால் வியந்து போவார்கள். பச்சை கம்பளத்தில் கரும்பு வண்ணம் தீட்டியது போன்ற தார்ச்சாலைகள், கருமற்துறை, வெள்ளிமலை, சேராப்பட்டு, கறியாலூர் என முக்கியமான ஊர்கள் இருந்தாலும் ஏகப்பட்ட மலை கிராமங்களும் உள்ளன. அதோடு அழகான அருவிகள். ஆம் முன்டியாநத்தம் அருகே பெரியார் நீர்வீழ்ச்சியும், கொடுந்துறையருகே மேகம் நீர்வீழ்ச்சி அழகாக கொட்டுகிறது. வெள்ளி மமைலயில் படகு குழாம் எப்போதும் உண்டு. சவாரி செய்யலாம். அங்கே மூங்கில் குடில் உள்ளது. மூங்கிலால் கட்டப்பட்ட, வீடு இது. அழகாக இருப்பதோடு தங்கி கொள்ளலாம்.

இங்கே மருத்துவ தோட்டமும் உண்டு. மூலிகை வளர்ப்பும் அதன் செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ளலாம். இங்கே மலைவாழ் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டுள்ள ஏகலைவன் பள்ளி மிக பிரமாண்டமாக உள்ளது. ஆம் தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் பிள்ளைகள் படிக்க உண்டு உறைவிடப்பள்ளியாக இரண்டு பள்ளிகள் மத்திய அரசு உதவியோடு செயல்படுகிறது. அதில் ஒன்று இந்த ஏகலைவன் பள்ளி. கறியலூரில் பயனியர் விடுதியும் உள்ளது. இங்கே ஒப்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெள்ளிமலையில் சந்தை நடைபெறும். அப்போது மலைவாழ் மக்கள் வந்து தங்களுக்கு தேவையானதை வாங்கி செல்வதை பார்க்க பிரமிப்பாக இருக்கும். மலைகிராமங்களில் இருந்து ஒத்தையடிப்பாதையில் மக்கள் எறும்பு
கூட்டம்போல் ஊர்ந்து வரும் காட்சியின் அழகே அழகு. அதேபோல் வெள்ளி மலையின் இருந்து மலையின் பெரும் பகுதியை ஒரே இடத்தில் நின்று பார்க்கும் இடம் (வியூபாயிண்ட்) உள்ளது. மலையை ரசித்து பார்க்கலாம். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் இடம் அது. சந்தையில் மலை மக்கள் பயிரிடும் மா, பலா, வாழை, கடுகுக்காய், மரவள்ளி கிழங்கு போன்றவைகளையும் சந்தைக்கு விற்ப்பணைக்கு கொண்டு வருவார்கள்.

ஓங்கி உயர்ந்த மலைகளை காண கல்வராயன் மலைக்கு வருவோருக்கு மலைக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன. ஆம் திருவண்ணாமலை வழியே வருவோர், சேரப்பட்டு வழிமலைக்கும், சேலம் மாவட்டம் வழியே வருவோர் கருமந்துறை வழியாகவும் கள்ளக்குறிச்சி வழியே வருவோரை மலைக்கு கீழேயுள்ள கோமுகி டேமை பார்த்து மகிழ்ந்து வரலாம். ஆம் கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் அதை தேக்கி வைத்து, விவசாயம் செய்ய கோமுகி டேம் கட்டப்பட்டது. இதை1967ல் அப்போது முதல்வராக இருந்த காமராஜர் திறந்து வைத்துள்ளார். சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளமுள்ள டேமின் பிரமாண்ட அணையின் கரை அழகான அழகு. இதன் தென்பகுதியில் இருந்து டேமின் முழுப்பகுதியை நம்கண்டு ரசிக்கும் வகையில் உள்ளது. பாயிண்ட் பகுதி. டேமின் கீழ்பகுதியில் அழகான மரங்கள் பூங்காக்கள் உள்ளன. கரையோரமாக மலைக்கு செல்லும் சாலையில் மலை ஏறும்போதே டேமை மலைமேலிருந்து கீழே பார்க்கும் முக்கியமான வியூபாயிண்ட் பகுதி உள்ளது.

பயமின்றி மலை ஏற சாலையில் நீண்டு தடுப்பு சுவர்கள் உள்ளன. இந்த மலைகளை காராளக்கவுண்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

தெற்குபட்டி என்ற பகுதியில் பிரபலமான வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சின்ன திருப்பதி என்று பெயர். திருப்பதிக்கு சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் மக்கள்.

கல்வராயன்மலை உள்ளது என்பதும் இங்கே மக்கள் வாழ்கிறார்கள் என்பதும் சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் வெளி ஊருக்கு தெரியவில்லை. ஆம். மன்னர்கள் காலத்திற்கு பிறகு ஆங்காங்கே ஜமீன்கள் ஆண்டனர். அதேபோல் இங்கே ஜமீன்தாரர்கள் வசம் இம்மலை இருந்தது. சுதந்திரம் கிடைத்து 27 ஆண்டுகளுக்கு பிறகே இம்மக்கள் சுதந்திரம் பெற்றனர். ஆம் 1975ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி எமர்ஜென்சி எனும் அவசர நிலைப்பிரகடணம் கொண்டு வந்தார். இந்தியா முழுக்க அப்போது அந்த ஆண்டுதான் கல்வராயன்மலை மக்கள் இந்திய சுதந்திர குடிமக்களா விடுதலை கிடைக்கப்பெற்றனர்.

அதன்பிறகே இம்மலைக்கு சாலை, மின்வசதி, பள்ளிகள் கிடைக்கப்பெற்றன. இம்மக்களின் பாரம்பரிய நடனம், இசை, தெருக்கூத்து இவைகளை கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் நடத்துகிறார்கள். இவைகளை ஒட்டு மொத்தமாக கண்டு ரசிக்க வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அரசு சார்பில் கரியாலூரில் கோடை விழா நடத்துகிறது. அப்போது அவைகளை கண்டு ரசிக்கலாம்.

மலை பகுதிகளை சுற்றிப் பார்க்க முந்தைய காலங்களைவிட இப்போது சாலை வசதிகள் நிறை உள்ளன. டூவீலர் போன்ற வாகனங்களில் சென்று பார்த்து ரசிக்கலாம். கல்வராயன் மலைக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து செல்ல பஸ் வசதி உள்ளது. இங்கிருந்து வெள்ளிமலை 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏழை பாமரன் ஊட்டியை குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கலாம் வாருங்கள் கல்வராயன் மலைக்கு.
கட்டுரை, படங்கள்: எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : Ari Date :6/9/2016 3:23:48 PM
அங்கு தங்க ஏதேனும் இடம் உள்ளதா
Name : Lingam Date :6/25/2013 12:09:18 AM
நான் கடந்த வாரம் சென்றேன் நல்லா இருக்கு சென்று பருங்கல்