நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


      லா என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை. இலக்கியம் என்பது மனித வாழ்வின் பிரதிபலிப்பாகவே இருந்து வந்துள்ளது. எனவே, வாழ்க்கையின் ஒரு பகுதியே, உலா. தமிழ் இலக்கியத்தில் ஒரே அர்த்தத்தில் இரண்டு சொற்களைப் பயன்படுத்துவது உண்டு.

 
நெஞ்சம் என்றாலும் அகம் என்றாலும் உள்ளத்தைக் குறிக்கும். எனினும் நெஞ்சகமே கோவில் என்கிறார் மாணிக்கவாசகர். இரண்டு சொற்களையும் பொருத்தமாக இணைக்கும்போது அர்த்தம் வலுப்படுகிறது. அதுபோல, உலா என்பதே சுற்றி வருவதுதான். அதற்கு கூடுதல் வலிமை கொடுக்கவே சுற்றுலா என்ற பெயர்  பயன்பாட்டில் உள்ளது.


      அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகம் இன்று சுருங்கி வருகின்ற நிலையில், சுற்றுலா என்பது வாழ்வின் ஓர் அங்கமாகவும், சிறந்த பொழுதுபோக்காகவும், வருமானம் ஈட்டித்தரக்கூடிய தொழிலாகவும் அமைந்துள்ளது. 


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்க்கானத் தேவைக்கேற்பவும் ஆசைக்கேற்பவும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் பெருகிவருகின்றன. எனினும், பொருளாதார நிலைமையைக் கொண்டே சுற்றுலாவின் தன்மை அமைகிறது என்பதே உண்மையும் யதார்த்தமுமாகும்.


      செலவைப் பெருக்காமல் அதிக இடங்களைப் பார்வையிடும் வாய்ப்புள்ள வகையில் சுற்றுலாவைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனமாகும். அதற்கேற்ப பல சுற்றுலா நிறுவனங்கள் இன்று செயல்பட்டு வருகின்றன. சிறப்புச் சலுகை, கூடுதல் பயன்கள் இவற்றுடன் கூடிய சுற்றுலா நிகழ்ச்சிகள் (tour package) தற்போது அதிகரித்து வருகின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் சுற்றுலா செல்வது இன்றைய உலகில் எளிதான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. 

      சுற்றுலா செல்லும்போது கவலைகள் மறைகின்றன. வழக்கமான நெருக்கடிகளிலிருந்து மனது விடுதலை அடைகிறது. நாம் வாழ்கின்ற இடமே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் மனதிற்கு, உலகம் மிகப் பரந்து விரிந்தது என்பதும் வாழ்க்கையின் சுவையான அம்சங்கள் பலவிதங்களில் இருக்கின்றன என்பதையும் சுற்றுலாவைப் போல எளிதாகப் புரிய வைக்கின்ற ஆசான் வேறெதுவும் கிடையாது.

தனி மனிதனின் கர்வம்-அகந்தை-தன்முனைப்பு எனப்படும் ஈகோ எல்லாவற்றையும் சுற்றுலா நொறுக்கித் தள்ளிவிடும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னதுபோல, மானுட சமுத்திரம் நான் எனக்  கூவத் தோன்றும்.ஏற்றத்தாழ்வு மிகுந்த உலகில் எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருப்பதையும், அதை அனுபவித்து வாழ்வதற்கானப் பயிற்சியைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் சுற்றுலா தருகிறது. எத்தனை நாடுகள், எத்தனைவிதமான மொழிகள், வெவ்வேறு வகையான மனிதர்கள், வாழ்க்கையின் வேறுபாடுகள் இவையனைத்தையும் நம் கண்களால் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது சுற்றுலா.

      இயற்கைப் படைத்துள்ள இன்பங்களையும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியையும் இரு கண்களால் அளந்து, இதயத்தில் பதிவு செய்துகொள்ளும் அரிய வாய்ப்பை சுற்றுலா வழங் குகிறது. ஒரு முறை சுற்றுலா சென்ற பிறகு, மனதிற்குள் ஏற்படும் உற்சாகமும் புது வலிமையும் நம் அன்றாடப் பணிகளை ஆர்வத்துடனும் வேகத்துடனும் செய்வதற்குத் துணையாக இருக்கிறது. பல இடங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளும் அனுபவம், நம் வாழ்க்கை முழுவதும் துணை வருகிறது.

      அனுபவங்களைவிட சிறந்த ஆசான் கிடையாது. சுற்றுலாவைப் போன்ற இனிய அனுபவம் வேறெதுவும் கிடையாது.

- கோவி. லெனின்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Ayaka Date :4/7/2013 8:58:28 PM
Now that's sbulte! Great to hear from you.