நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 சென்னைக்கு அருகில் உள்ள அருமையான சுற்றுலாத்தலம் ஏலகிரி.   ஆண்டின் அனைத்து மாதங் களிலும் இதமான, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் இந்த மலைவாசஸ்தலம் இந்த ஏலகிரி.கோடைகாலம் மட்டும்தான் என்றில்லாமல் எந்த காலத்திலும் செல்ல வசதியான, அருமையான, அழகிய இடம் ஏலகிரி. கொண்டை ஊசி வளைவுகளும்,பசுமைப் பள்ளத்தாக்குகளும்,அழகிய நீர்வீழ்ச் சியும் ஏலகிரியை சின்ன ஊட்டி என்று சொல்லவைக்கின்றன.

அமைதியை விரும்புபவர்கள்,அழகிய இயற்கை சூழ்நிலையை ரசிக்க விரும்பு பவர்கள்,மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தில் இரண்டு,மூன்று நாட்கள் தங்கி வரலாம்.தமிழகத்திலேயே இங்குதான் “பாரா கிளைடிங்’ எனப்படும் பாரசூட்டில் பறக்கும் பயிற்சி வழங்கு கின்றனர். நகரத்தின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட்டு,இயற்கையை ரசிக்க வேண்டும்,சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு,குறைந்த செலவில் அருமையான இடம் ஏலகிரி என்றால் மிகையில்லை.கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய பச்சைக்கம்பளப் பகுதி, வேலூர்
மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது மலை. படகு துறை இருக்கிறது.  அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது.13  கொண்டை ஊசி வளைவுகள் இருக்கிறது.  ஒவ்வொரு வளைவிற்கும் கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி , பேகன் என அழகிய தமிழ் பெயர்கள். மலை பழங்கள் என பலாபழம்,  ராம சீதா பழம் போன்றவை இருக்கிறது.  கொம்பு தேன் மற்றும் மலை  தேன் கிடைக்கிறது. 


அதனாவூர் ஏரியில் படகு சவாரி உண்டு. அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. இன் னும் அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் உண்டு. தங்குவதற்கு பதினைந்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் கழுகு பார்வை யில் பார்த்து மகிழலாம்.


ஏலகிரியில் இரண்டொரு நாட்கள் தங்கி,இயற்கையின் அருட் கொடையை ரசிக்க பல இடங்கள் உள்ளன.  புங்கனூர் ஏரி! நான்கு புறமும் மலைகளுக்கு நடுவே செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரியில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் தண்ணீர் நிரம்பியிருக்கும். இதனால்,படகு வசதி உள்ளது.  ஏரியின் நடுவே அழகிய செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது.  இந்த ஏரியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பண்ணை, பார்க்க வேண்டிய முக்கியமான இடம்.  அபூர்வ மூலிகைகள் பல இங்கே வளர்க்கப் படுகின்றன. மலைப்பாதையில் நுழையும்போதே, ஏலகிரி மலையின் அழகை ரசிக்க,டெலஸ்கோப் வசதி உள்ளது.  

இதை,பரன் டெலஸ்கோப் என்கின்றனர்.  ஏலகிரி மலையின் உச்சியில் முருகப் பெருமானுக்கு கோயில் உள்ளது.  அங்கிருந்து பார்த்தால் ஏலகிரியின் முழு அழகையும் கண்களால் பருகலாம். ஜலகம் பாறை நீர்வீழ்ச்சி,ஏலகிரிக்கு வரும் முக்கிய சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடம். சுமார் 30 மீட்டர் உயரத்திலிருந்து வெள்ளிக்கம்பியை உருக்கி விட்டது போல விழும் ஆறு,மூலிகை மணத்தை சுமந்து வருகிறது.ஆண்டின் பெரும்பாலான மாதங்கள்,இந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்திருக்கும் ஏலகிரி மலையில் ஏராளமான
பழத்தோட்டங்கள்,பூந்தோட்டங்கள் உள்ளன.மலையேறும் பயிற்சி பெறுபவர்கள்,மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏலகிரி மலை அருமையான இடம்.அதற்கான வசதிகள் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சாகச பயணங்களுக்கும் மலையேற்றத்திற்கும் ஏற்ற இடம் இது,பாரா கிளைடிங்,ராக் கிளைம்பிங் என பல விளையாட்டுகளூக்கு இங்கே இடம் உண்டு.


மலைப்பகுதி ஆயிற்றே,சாப்பிட நல்ல உணவகங்கள் இருக்குமா என்ற சந்தேகமே வேண்டாம்.பல நல்ல ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளன.சென்னை,பெங்களூர் நகரங்களை விட மிகவும் குறைவான விலையில் அருமையான சீதோஷ்ண நிலையில் ஓட்டல்கள் உள்ளன.


வழித்தடம் :

வேலூர் மாவட்டம் வேலூரில் இருந்து 91 கிலோ மீட்டர் தூரம் திருப்பத்தூர் ரோட்டில் பொன்னேரி கிராமம்
வழியாக ஏலகிரி மலைக்கு போகலாம். 14 அழகான, ஆபத்தில்லாத கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் வருவதுதான் ஏலகிரி மலை.


ஜோலார்பேட்டை ஜங்ஷனில் இருந்து 19 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது,கிராமப்பகுதிகள் வழியாக
போடப்பட்டுள்ள அழகிய சாலைகளில் பயணம் செய்து,மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால் ஏலகிரி சொர்க்கம்போல பச்சைக் கம்பளம் விரித்து பரந்து விரிந்து கிடக்கிறது.


சென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில்
உள்ளது இந்தமலை.வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் சற்று நேரத்தில் இடதுபுறத்தில்
ஏலகிரி பலகையைக் காணலாம்.


சென்னை,பெங்களூர்,கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு வர அருமையான தேசிய நெடுஞ்சாலை உள்ளது.  அருகில் உள்ள விமான நிலையங்களாக சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்களைச் சொல்லலாம்.
 
பஸ் மற்றும் ரயில் மூலம் ஏலகிரிக்கு வர வேண்டும்
என்றால்,ஜோலார்பேட்டையில்தான் இறங்க வேண்டும்.   சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு ஒரு பேருந்து ஏலகிரிக்கு நேரிடையாக கிளம்புகிறது.  
  
  
  


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : K.Asokan Date :4/13/2016 11:54:46 AM
ஏழைகளின் ஊட்டி அல்லவா இது. கட்டாயம் செல்ல வேண்டிய இடம். மிக்க நன்றி
Name : Sivaraj Date :2/25/2016 7:40:25 PM
Thanks for your information
Name : K.MAHENDIRAN Date :5/25/2015 10:30:38 PM
மிகவும் அருமையான தகவல்கள் தொடரட்டும் உங்கள் பணி
Name : vinoth Date :5/5/2014 6:46:39 PM
மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் அழகிய அனுபவஙகளை அளித்தமைக்கு மிக்க நன்றி
Name : rajendran Date :5/4/2014 8:17:44 AM
இ வான்ட் ஆல் டிடேல்ஸ்
Name : Mely Date :4/6/2013 6:48:53 PM
This is exactly what I was lkoinog for. Thanks for writing!
Name : Grigori Date :4/6/2013 6:48:50 PM
You couldn't pay me to ionrge these posts!