நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


‘தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது அழிபட்டுக் கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள்,கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன’’ என்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா,   3.7. 1960 தேதியிட்ட திராவிட நாடு இதழில் பிச்சாவரம் காடுகள் பற்றி கட்டுரை எழுதியுள்ளார்.அவர் மேலும் அக்கட்டுரையில்,  ‘’ஆலுக்குள்ள விழுதுகள் போல, அந்தச் செடிகளில் இருந்து கிளம்பிய கொடிகள், தண்ணீரைத் தொடுகின்றன; உள்ளேயும் செல்கின்றன. இடையிடையே திட்டுகள் உள்ளன. அவை மேய்ச்சல் இடங்களாகப் பயன்படுகின்றன.சில இடங்களில் விரிந்து பரந்து உள்ளன. சில இடங்களிலோ, தோணி நுழைகின்ற அளவு மட்டுமே நீர்ப்பரப்பு உள்ளது. அங்கே, விழுதுகளும், கொடிகளும் வழிமறித்து நிற்கின்றன. வளைத்தும், பிரித்தும், நீக்கியும் வழி காண வேண்டி இருக்கிறது.

செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப்பறவைகளும், ஆங்காங்கு தங்கி உள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்தில் இருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடியே அழகாக இருக்கின்றது.வெளிர் நீலவண்ண நீர், சூழப் பச்சை, மேலே நீலமும், வெண்மையும் கொண்ட மேகக்கூட்டம், இடையில் வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை அணிவகுத்துச் செல்வதைப் போல!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது இந்த  பிச்சாவரம் காடுகள்தான். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் இலைகளின் வழியாக ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.

 கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர் வரை  மோட்டார் படகில் சென்று உல்லாசம் அனுபவிக்கலாம். பிச்சாவரம் வனச்சுற்றுலா மையமாக விளங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து ரசித்து வருகின்றனர். சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை, மாங்குரோவ்ஸ் காடுகள் மற்றும் அழகிய கடற்கரை பகுதிகளை ரசிக்கவும் வசதியுள்ளது.   சிதம்பரத்தில் உள்ள ஓட்டல்களில் ரூ. 400 முதல் ரூம்கள் கிடைக்கும்.இங்கிருந்தபடியே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மற்றும் சுற்றுலா பகுதிகளை பார்க்கும் வகையில் உயர்கோபுரம் ரூ. 7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

வழித்தடம் :

சிதம்பரத்தில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த இடத்துக்கு பஸ் வசதி உள்ளது.  சிதம்பரத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.  


  
  
  
  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : A.perumal Date :10/10/2014 9:11:05 PM
சூப்பர் பிளாசே
Name : A.perumal Date :10/10/2014 9:08:39 PM
super
Name : kavitha.s Date :6/28/2014 2:44:29 PM
வார்த்தைகளால் சொல்வதை விட காட்சிகளால் ஒரு விஷயத்தை சொல்வது மிகவும் சிறப்பிற்குரியது
Name : kanagaraju.d Date :10/11/2013 11:37:23 AM
மிகவும் பயனுள்ள படங்களும் பதிவுகளும் இருந்தன .மாணவர் பயன் பெற்றனர். நன்றி ! வாழ்த்துகள்.