நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


கோவில்கள் உள்ள திருக்கோவிலூர்!விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருவோருக்கு ஆன்மீக சுற்றுலாமையமாக திகழ்கிறது இவ்வூர். ஆம் இந்த ஊருக்கு பெயர் திருக்கோவிலூர். இங்கு 108 வைணவ தலங்கள் உள்ளன. அதில் ஒன்று உலகளந்த பெருமாள் கோயில். பகவான் கிருஷ்ணரின் 10 அவராதரங்களில் ஒன்று வாமண அவதாரம் மகாபலி என்ற அசுரகுல அரசன் ஏகப்பட்ட தானதர்மங்கள் செய்தாலும் தான் என்ற அகம்பாவமும், தேவர்களை கொடுமைப்படுத்தும் குணம் உள்ளவன். எனவே தேவர்கள் கிருஷ்ண பகவானிடம் முறையிட்டனர். அவனது ஆணவத்தை அடக்கி தங்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மகாபலி விழா நடத்தி நாட்டு மக்களை எல்லாம் வரவழைத்து தானம் கொடுக்கப்போவதாக அறிவித்தான். அந்த விழாவின் மக்களுக்கு கேட்டதை எல்லாம் வாரி வழங்கியபடியே இருந்தான் மகாபலி. அப்போது ஒரு குடுமி வைத்த அந்தன சிறுவனாக பகவான் மகாபலி முன்பு வந்து நின்றார். சிறுவனே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அந்த சிறுவனோ பெரிதாக ஒன்றும் வேண்டாம் என் காலடி அளவில் மூன்றடி நிலத்தை மட்டும் தானமாக கொடு என்றான். இதை கேட்ட மகாபலி சிரித்தான். அட இவ்வளவுதானா என்று. அப்போது மகாபலின் நண்பரான சுக்கிராச்சாரியார், இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. வந்திருப்பது அந்தணன் அல்ல. மாயகிருஷ்ணனேதான் என்று சொன்னார். அதற்கு மகாபலியோ அப்படியே இருந்தாலும் இருக்கட்டுமே அந்த திருமகன் புருஷனான நாராயணனே என்னிடம் கை நீட்டி தானம் வாங்குவது எனக்குப் பெருமைதானே என்று சொல்லிவிட்டு சிறுவனை பார்த்து நீ கேட்ட மூன்றடி மண்ணை அளந்து எடுத்துக்கொள் என்று அனுமதி கொடுத்தான்.அப்போது அந்தண சிறுவனாக வந்த கிருஷ்ணபரமாத்மா தன் உருவத்தை வானாள உயர்த்தினார். ஆம், வானத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்த பகவான் தன் காலை உயர தூக்கி பூமியை ஒரு அடியாகவும், வானத்தை ஒரு அடியாகவும் என இரு அடிகள் அளந்துவிட்டு மூன்றாவது அடிக்கு எதை காட்டுகிறாய் என்று பகவானின் கோபப் பார்வையோடு கேள்வியும் எழுந்தது. இறைவனின் பெருமை அறிந்த மன்னன் மகாபலி, தேவதேவா என் சத்தியத்தை காப்பாற்ற வேண்டியது உமது கடமை. உமது திருவடியால் (காலால்) அடியேனின் தலைமைய அ ளந்து என்னை ஏற்றுக்கொள் என்றான்.

உடனே பகவான் மகாபலியின் தலையின் மீது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளத்துக்கு போ என்று சொல்லி அனுப்பினார். அவனிடம் கருணை காட்டிய பகவான் பாதாலத்தில் இருந்தபடியே வாயிற்காப்பாளன இருந்த பகவான் காட்சி கொடுத்து மகாபலிக்கு மோட்சம் அளித்தார். அப்படிப்பட்ட இறைவனுக்கு பெயர் உலகளந்த பெருமாள். அவர் இக்கோயிலில் பிரமாண்டமான வடிவில் ஒரு காலை தூக்கியபடியே உலகை அளக்கும் காட்சியில் மூலவராக இருந்து காட்சி கொடுக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட சிறப்பு பெற்ற தலம் திருக்கோவிலூரின் மையப் பகுதியில் உள்ளது. தமிழகத்தில் உயர்ந்த கோபுரங்கள் உள்ள கோயில்களில் ஐந்து. அதில் இக்கோயில் ராஜகோபுரம் ஐந்தாவதாக உள்ளது.

இது மட்டுமா இக்கோயிலுக்கு வடக்கே தென்பெண்ணையாற்றின் தென்கரையில் வீரட்டனேஸ்வரர் கோயிலும், ஆற்றின் வடகரையில் சிறுமலை மீது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற அதுல்ய நாதேஸ்வரர் ஆலயமும் அதற்கு மேற்கு பகுதியில் பெங்களூரில் இருந்து இங்கு வந்து முக்தியடைந்த ரகோத்த சுவாமிகளின் பிருந்தாவனம், அதற்கு மேற்கில் ஞானாநந்த சாமிகளின் தபோவனமும் காட்சியளிக்கின்றன. பெண்ணையாற்றின் இரு கரைகளிலும் அழுகுற கோயில்களும் தபோவனமும் அமையப் பெற்றுள்ளதால் தான் இவ்வூருக்கு திருக்கோவிலூர் என்று கோவில் பெயரிலேயே ஊர் அமைந்துள்ளது.இது மட்டுமா?

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் வாழ்ந்த பகுதி இது. புறநாநூற்றில் இடம் பெற்றுள்ள பாரிவள்ளல். இவரது ஆஸ்தான நண்பரும், புலவருமான கபிலர். இவர்தான் தமிழ் புலவர்களிலேயே அதிக பாடலை பாடியவர். வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை இவர்கள் அழகு மிகுந்த பெண்களாக இருக்கும்போதே பாரிவள்ளல் உயிர் பிரிந்தார். போரின்போது அப்போது தனது மகள்களை புலவர் கபிலரிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்தார்.நண்பரின் பிள்ளைகளை தனது மகள்களாக பாவித்து வளர்த்து திருமணம் செய்து கொடுக்க முயலும்போது பாரியின் எதிரிகளுக்கு பயந்து அப்பெண்களை மணக்க யாரும் முன்வரவில்லை. அவர்களை கபிலர் கையோடு அழைத்துக்கொண்டு திருக்கோவிலூ வந்தார். இப்பகுதியை ஆண்டு வந்த திருமுடிக்காரி என்ற மன்னரின் வாரிசான திருக்கண்ணன், சிறுகண்ணன் ஆகியோருக்கு மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மணமுடித்து கொடுத்துவிட்டு, இப்பெண்ணையாற்றின் மையப்பகுதியில் உள்ள குன்றின் மீது, படத்து உண்ணாநோன்பு இருந்து தன் உயிரை நீத்தார்.

இப்போது அக்குன்று கபிலர் குன்று என்று அழைக்கப்படுவதோடு, அக்குன்றின் மீது சிறிய அழகான கோவிலும் எழுப்பப்பட்டு மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது என்கிறார் கவிஞரும் ஆய்வாளருமான ஆநிரைக்காவலன்.

இவ்வூருக்கு மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆதிதிருவரங்கம் என்ற ஆலையம் உள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாத பெருமாளை விட பெரிய அளவிலான பெருமாள் சயனகோலத்தில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் வண்ணம் காட்சி தருகிறார். அதனால்தான் இவ்வூருக்கு ஆதிதிருவரங்கம் என்ற பெயர் உண்டானது.

தென் மேற்கில் ரிஷிவந்தித்தில் அர்த்த நாரீஸ்வரராக சிவபெருமானும் பார்வதியும் கோயில் கொண்டுள்ளனர்.திருக்கோவிலூருக்கு கிழக்கே 20 கிலோ மீட்டரில் திருவெண்ணெய்நல்லூரில் நால்வரில் ஒருவரான சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிவபெருமான் கிருபாபுரீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார்.

திருக்கோவிலூர் திருவண்ணாமலையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 30 கிலோ மீட்டரில் உள்ளது. இவ்வூரை சுற்றியும் கோயில்களும் தபோவனமும் அரும் பெரும் காட்சியாக விளங்கி வருகின்றன. தென்பெண்ணையாற்றின் இருகரைகளிலும் அமையப் பெற்றுள்ளன. பசுமையான மரங்களையும், கரையோடி ஆலயங்களையும் தரிசிக்க வாருங்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களான சந்திரசேகரும், செந்தில்குமார் ஆகியோர்.

கட்டுரை, படங்கள்: எஸ்.பி.சேகர்


View Larger Mapதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :