நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 அரியும் சிவனும் ஒன்று - அரிய தத்துவத்தை உணர்த்திய 
சங்கரநாராயணசாமி கோவில்

                ருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில். இங்குதான் அரியும் சிவனும் ஒன்று அரிய தத்துவத்தை உணர்த்தினார் ஆதிபகவன். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரம் சங்கரன் கோவிலில் அமைந்த  ஆன்மீகத் தலமான இதன் பெரிய கோவிலை 11ம் நூற்றாண்டில் ஆண்டு வந்த பாண்டிய மன்ன்னான உக்கிரபாண்டியன் அமைத்தான்.   அப்போதைய காலங்களில் சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? இந்த இரண்டு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இந்து சமயத்திற்குள்ளேயே நடத்த இந்த மோதலால் பலர் கழுவில் ஏற்றப்பட்டனர். வெட்டியும் கொல்லப்பட்டனர். தேவாதி தேவர்கள் மூலமாக இதனையறிந்த சிவபெருமான் சைவமும் வைணமும் ஒன்று அவை என் உடலில் தோன்றியவை என்பதை நிரூபிக்கும் பொருட்டு தன் உடலில் ஒரு பாதி அரியாகவும் மறுபாதி சிவனாகவும் காட்சியருள சமய பக்தர்களின் சண்டை ஒயந்தது.
 
இறைவனின் காட்சியை தானும் காணும் பாக்கியம் வேண்டும் என்று பார்வதி தேவியும் இறைவனிடம் வேண்ட, சிவபெருமானோ 

உமையவளை புன்னைவனத்தில் தவமிருந்து என்னை வேண்டவும் என்கிறார்.   பார்வதி தேவியும் அவ்வாறே கல்பகோடி காலம் தவமிருக்க, அதற்கு மனமிரங்கிய சிவபெருமான் சங்கர நாராயணர் என அரியாகவும்,சிவனாகவும் காட்சி தந்தருளினார். அன்றிலிருந்து சங்கரநாராயணர் கோவில் என காரணப்பெயர் அமைந்த்து. இந்த அரியகாட்சி தான் ஆடித்தபசு என்றழைக்கப்படுகிறது.  அதனைக்காண்பதற்கு லட்சோப லட்சம் மக்கள் ஆடிப்பெளர்ணமியின் போது இங்கேதிரண்டு வருகிறார்கள்.   அப்படிப்பட்ட புண்ணிய ஷேத்திரம் பெரியகோவிலில் அன்றையதினம் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு மாவிளக்கு எடுக்கிறார்கள்.

இதனால் தீராதவியாதியும் தீருகின்றது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கேயுள்ள கோமதியம்பிகை ஆலயத்தில் நேமிச்சை செலுத்தி வழிபட்டால் நாகசர்ப்ப தோஷம் விலகும் புற்றிலிருந்து சிவபெருமான் லிங்கமாக சுயம்பு வடிவாக உருவாகியதால் இங்கே ஆலயத்தில் உள்ள புற்று மன்னை பயபக்தியோடு இறைவனை வேண்டி உடம்பில் பூசிக்கொண்டால் சரும வியாதிகள் தீருவதோடு நோய் அண்டாது என்பது காலம் காலமாகவே நடந்து வரும் ஆண்டவன் நிகழ்த்திய அதிசயங்களில் ஒன்று.
வழித்தடம் :

வடதிசையான மதுரையில் இருந்து தெற்கு நோக்கி திருமங்களம், கல்லுப்பட்டி, ராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில்.  பேருந்து பயணம் என்றால் 
3 மணி நேரம் ஆகும். கார் பயணம் என்றால் இரண்டு மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ்  ரயில் வசதி உண்டு. 

- பரமசிவன்
படங்கள் : ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :