நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 

மிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். இன்றைய முதல்வர் ஜெயலலிதா சில முறை இக்கோயிலுக்கு சென்று வந்துள்ளார். இசைஞானி இளையராஜா மூகாம்பிகையின் தீவிர பக்தர்.  பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து வணங்கிச்செல்கிறார்கள்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பசுமையான இயற்கை சோலைகள் கொண்ட சிற்றூர் கொல்லூர். இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது. 

கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான். தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர். இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவப்பெருமானிடம் சென்று முறையிடுகின்றனர். அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் பொருத்தறுளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார்.

அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்குகின்றனர். அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடத்தை மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர். அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார். அப்போது சிவனை நோக்கி தவம் செய்யும்போது அவர் முன் வந்து ஆசி வழங்குகிறார். அவர் தங்களை பூஜை உருவம் வேண்டும் என்ற போது லிங்க பிரஸ்டை செய்யகூறுகிறார்.
 
ஆனால் அம்பாளுடன் உடன் இருப்பது போல் பூஜிக்க வேண்டும் என எண்ணுகிறார்.  அவரின் ஆசைப்படி மாயசக்தியான மூகாம்பிகா உருவத்தை அவருக்கு காட்டுகிறார். சிவனின் சக்தியும் அதில் இருப்பதை உணர்ந்து அவ்வுருவத்தை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார். 

ஆதிசங்கரருக்கு அருள்:

ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாக உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு – ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்தபாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர். இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணுஅவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும், தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார். அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான். கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார். அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள். ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினாள் அந்த இடத்திலேயே என்னை பிரஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆதிசங்கரரும் அதை ஏற்று அமபாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகாளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். அந்தயிடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும். 

ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள். சவுபர்னிக்கா:

கோயிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபார்னிக்கா ஆறு ஓடுகிறது. கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசிர்வாதி நீரோடையை உருவாக்கி தந்தார். அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக்கூறப்படுகிறது. கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 64  வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன. இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது. 

தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவரையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன. இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோயில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார வலா வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை. தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வரிசையில் வரவைத்து அனைவரையும் சமமாக அமரவைத்து போதும் என்ற அளவுக்கு உணவு வழங்கப்படுகிறது. 

வழிதடம் - தங்கும்விடுதி :

இங்கிருந்து ஆதிசங்கரர் தவம் செய்த இடமான கொடச்சேரி செல்ல ஜீப்கள் உண்டு. 1 மணி நேர பாதையே இல்லாத மலையில் ஜீப்பில் நம்மை அழைத்து செல்வது த்ரில்லிங்க். 1 மணி நேரம் மலையேறினால் தான் கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த கோயிலை காண முடியும். சுவாமிக்கு அபிஷேகம் எல்லாம் பக்தர்களே செய்துக்கொள்ள வேண்டும். அந்தயிடத்தில் இருந்து திரும்பி வர மனம்மே வராது. அந்தளவுக்கு பசுமையான, மேகம் சூழந்த கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை பசேல் என்று குளிச்சியாக இருக்கும் அந்த பகுதி. இரவில் தங்க அனுமதியில்லை. சென்னையில் இருந்து மங்களுருக்கு இரயில் மூலம் சென்று அங்கிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. பெங்களுரூ, சிமோகா, கோவையில் இருந்து கொல்லூர்க்கு நேரடியாக பேருந்து வசதியுள்ளது. தங்கும் விடுதிகள் வசதிக்கு ஏற்றாற்போல் உள்ளது. திருப்பதி தேவஸ்தானம், கர்நாடகா சுற்றலா வளர்ச்சி கழகம் உட்பட பல அமைப்புகள் குறைந்த செலவில் இங்கு தங்க விடுதிகளை கட்டி வைத்துள்ளது. தனியார் விடுதிகளும் மிக மிக குறைந்த விலையில் அறைகள் தருகின்றன. உணவு விடுதிகள் உண்டு.

- ராஜ்ப்ரியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [9]
Name : எம். சதீஷ்குமார் Date :1/1/2016 12:48:03 AM
கொல்லூர் மூகாம்பிகை திருத்தலத்திற்கு 2007 ஆம் ஆணடில் முதன்முறையாக சென்றேன் சென்று வந்த பின் அரசு தேர்வு மூலம் வேலை கிடைத்தது.சிறு வயது முதல் உடல்நல குறைவால் பாதித்த எனக்கு அம்மனை தரிசித்த பின் உடல நலம் தேறி நலமான வாழ்வு கிடைத்தது
Name : Bhaskaran.c Date :11/29/2015 10:44:56 PM
ஆன்மீக பயணம் செய்து கொ‌ள்பவர்கள் இந்த கொல்லூா் சென்று வரவேண்டும் அம்மா சக்தி பெறவேண்டும் அன்பர்களே நன்றி கடலூர் அன்பா் 8608827677
Name : செந்தில் குமார் ந Date :9/6/2015 11:35:38 PM
என் ஆன்மா தாய் ஸ்ரீமூகாம்பிகை
Name : rajan Date :7/15/2014 5:28:31 PM
நன்றி.
Name : ramesh Date :3/19/2014 11:55:50 PM
mookambikai amman is very most power full god mookambikai devotees are joinand make mookambikai seva sangam plz send mail for me manikollur@gmail.com
Name : manikandan c Date :2/28/2013 10:44:49 PM
நன் மூகாம்பிகை பக்தன் ஷக்தி யான தேவி சென்னை இருந்து மாசம் மாசம் கொல்லூர் போகிறேன் மூகாம்பிகை பற்றி அறிய என் செல் நோ -9500145650 மணிகண்டன் சென்னை -89 தொடர்பு கொள்ளவும்
Name : manikandan c Date :2/28/2013 10:44:49 PM
நன் மூகாம்பிகை பக்தன் ஷக்தி யான தேவி சென்னை இருந்து மாசம் மாசம் கொல்லூர் போகிறேன் மூகாம்பிகை பற்றி அறிய என் செல் நோ -9500145650 மணிகண்டன் சென்னை -89 தொடர்பு கொள்ளவும்
Name : THALAIVAN Date :10/22/2012 11:01:17 PM
அருமையான கருத்து பதிவு.... அற்புதமான விளக்கம்.... உயர்ந்தவர், உத்தமர், மனிதருள் புனிதர் ஆதி சங்கரர் சுவாமி அவர்கள் எப்படி எல்லாம், நடந்தே சென்று அத்வைத மடங்களை நிறுவியுள்ளார் பார்த்தீர்களா?
Name : arun Date :10/19/2012 2:03:59 PM
நான் பல முறை கொல்லுருக்கு போயிருக்கேன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கோவில் மூகாம்பிகை அம்மன் கோவில். அந்த அம்மா என் வாழ்க்கைல நிறைய மாற்றங்களை கொடுதுருகாங்க. வருஷத்துல ஒரு முறையாது நான் கொல்லுருக்கு போய்டுவேன்.