நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


கடவுளின் சன்னதி! மனதுக்கு நிம்மதி!

      ல்லாம் அவன் செயல் என்று எண்ணுகின்ற மனது, தன் மீதான சுமைகளைக் குறைத்துக் கொள்கிறது. தேவையற்ற குழப்பங்களிலிருந்து விடுபடுகிறது. இது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நலன் சேர்க்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. குடும்ப நலன், உற்றார்-உறவினர் நலன், தொழிலில் கவனம் எனப் பல நல்லவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

 
ஆண்டவன் குடிகொண்டிருக்கும் இடங்களுக்குச் சென்று, என்னுடைய பிரச்சினைகளை நீ பார்த்துக் கொள். உன்னிடம் என்றும் நான் உண்மையான பக்தியுடன் இருப்பேன் என்று மனதின் பாரங்களை இறக்கிவைப்பது பக்தர்களின் வழக்கம். அவர்களின் பாரங்களைக் குறைத்து, நிம்மதி யையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வதே பக்தி சுற்றுலா.  இந்தியத் திருநாடு, கோவில்களின் தாய்வீடு. அதுவும் தமிழகத்தில் சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்கொள்ளும்வகையில் தமிழகத்தில் நவகிரகங்களுக்குமான கோவில்கள் உள்ளன.

அந்தக் கோவில்களுக்கான சிறப்பு சுற்றுலாத் திட்டங்களை அரசும் தனியார் சுற்றுலா நிறுவனங் களும் உருவாக்கியுள்ளன. நவக்கிரக கோவில்கள் அனைத்தும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் பகுதியிலும் அமைந்துள்ளன.

 


குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் பிரசித்தி பெற்றவை என்பதால் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலமும், காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்களிலும் முறையே வியாழன், சனிக் கிழமைகளில் வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மற்ற நாட்களிலும் இங்கு வழிபடலாம். இதுபோலவே ராகு-கேது ஸ்தலங்கள், புதன் ஸ்தலம் , சூரியனார் கோவில் என்று அனைத்து கிரகங்களையும் வழிபட்டு தோஷநிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

      ராமேஸ்வரம் கோவில் என்பது இந்துக்களின் புனிதத் தலமாகும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கே வந்து புனித தீர்த்தங்களில் நீராடுகிறார்கள். இதன்மூலமாக தங்களின் பாவங்கள் கழுவப்படுவது என்பது இந்துக்களின் நம்பிக்கை. பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் பக்தர்களின் விருப்பத்திற்கும் வேண்டுதல்களுக்கும் உரிய கோவில்களாக அமைந்துள்ளன. இத்தகைய கோவில்களுக்கான சிறப்புச் சுற்றுலாத் திட்டங்களும் உள்ளன. இந்துக் கோவில்கள் மட்டு மின்றி வேளாங்கண்ணி மாதாகோவில், நாகூர் தர்கா போன்ற கிறிஸ்தவ-இஸ்லாமிய வழிபாட்டு இடங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றன.


      தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தங்கள் போலவே இந்தியாவின் வடபகுதியில் உள்ள காசி, மதுரா, இமயமலையில் உள்ள அமர்நாத், பத்ரிநாத், கைலாஷ் உள்ளிட்ட கோவில்களுக்கும் அருகில் உள்ள நாடான நேபாளத்தில் உள்ள கோவில்களுக்கும் பக்தி சுற்றுலா செல்வது தற்போது எளிமையானதாகிவிட்டது. குறைந்த கட்டணத்தில் இப்பகுதிகளுக்குப் பலரும் சென்று வருகிறார்கள்.

      கடவுளின் சன்னதியில் மனதுக்கு நிம்மதி நாட விரும்புவோருக்கு இத்தகைய சுற்றுலாக்கள் மனோதிடத்தை அளிக்கக்கூடியவை.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :