நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


சிங்கப்பூர் என்றால் சுத்தம் என்று சொல்லிவிடலாம்.    அந்த அளவுக்கு அந்த நாடு பராமரிக் கப்படுகிறது.  அங்கே விதிக்கப்பட்டிருக்கும் அரசு விதிகளும் அதை மக்கள் மீற முடியாத அளவுக்கு  இருக்கும் கட்டுப்பாடுகளும் ஆச்சரியத்தை தருகின்றன.  மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது.  சாலைகள் அத்தனை சுத்தம். எங்கேயும் ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள்  கிடையாது. எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் அநியாயத்துக்கு வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள்.  ஆட்டோக்கள் இல்லாத நகரமாக இருக்கிறது சிங்கப்பூர்.

முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் எச்சரிக்கை செய்யும். உலகிலேயே சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான் மிக அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சி கண்ட ஒரு நாடு. சிங்கப்பூர் ஒரு சிறிய தீவானாலும் அதில் பார்க்க கூடிய இடங்கள் பல.  சிங்கப்பூருக்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.


தட்பவெட்ப நிலையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் இந்தியாவுடன் அதிகம் ஒத்துப் போகும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழர்களின்
எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமான போக்குவரத்து  இருப்பதால், சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவதில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர்.  இது குறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்,  ‘’சிங்கப்பூருக்கு
சுற்றுலா வருவோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர்’’ என்று கூறுகிறது.


 தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.

சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த
சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.


மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் மிகச்சிறிய நாடாகும். சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை
கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.


 உலகளவில் ஒரு நாட்டின் ஜனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது சிங்கப்பூர். சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும்.


சிங்கப்பூர் தீவு சுற்றுலாவாசிகளுக்கு ஒரு அருமையான சொர்கத்தை காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது, அது மட்டுமின்றி எல்லா வளமும் அமைந்த அமைதியாக வசிக்க உகந்த உணர்வுபூர்வமான இடமும் ஆகும். சிங்கபூருக்கு அதிக வருமானம் சுற்றுலாவாசிகளால் வருகிறது. 
 


சிங்கப்பூரில் தென்னிந்திய உடைகள்; கடைகள்;தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு உணர்வைத்தரும். குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்  வீசும்.


சிங்கப்பூர் சேலை, சிங்கப்பூர் செண்ட், சிங்கப்பூர் வாட்ச் என்று சிங்கப்பூர் பொருட்களின் மோகம் நம்மவர்களுக்கு அதிகம் உண்டு.  அதனால் சிங்கப்பூருக்கு செல்லும்
நம்மவர்கள் பர்ச்சேஸ் செய்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.


செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்.  முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் என்று ஒரு
சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கும்.  சரவணபவன், கோமளவிலாஸ், ஆனந்தபவன், அஞ்சப்பர் என்று தமிழக உணவகங்கள் உண்டு.

சிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, எஸ்பிளேனேடு இன்னபிற இடங்கள் உள்ளன.   

சென்டோஸா, சிங்கப்பூரை
ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். வேறு சில பயண மார்க்கங்களும் உண்டு.  சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும்.


தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் (சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் லைன்ஸ்) விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது. அண்டர் வாட்டர், வேர்ல்டு, டால்பின் லகூன் கொள்ளை அழகு. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள்.

இங்கு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான
இடம்.சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான விமான நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2
கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில விமானசேவை நிறுவனங்கள் இவ்விமான நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும்.


செயின்ட் ஜான்ஸ் தீவு திட்டுகளுக்கு படகு மூலம் செல்ல நகரத்தின் மையத்தில் இருந்து மட்டும் 15 நிமிடங்கள் ஆகும்.  செயின்ட் ஜான்ஸ் தீவு வீடுகள் பல அரசாங்க
வசதிகள், ஆனால் பொது அணுகக்கூடிய தீவின் பகுதிகளை இன்னும் உள்ளன. மிக நேர்த்தியான கோரல்கள் மற்றும் மற்ற பாறைகள் வாழ்க்கை சில வேண்டும் என்று இயற்கை கடற்கரைகளில் குறுகிய நீட்டிப்புகளின் உள்ளன. 


இந்த கடற்கரைகளில் பதிலாக மென்மையானது அவர்களுக்கு வருகை போது மென்மையான தயவுசெய்து. சதுப்பு
நிலக்காடுகள், ஒரு சிறிய இணைப்பு உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [25]
Name : R BASKARAN Date :2/16/2016 10:59:44 AM
10 பேர் சுற்றுலா செல்லவேண்டும் ஒரு நபருக்கு பணம் எவ்வளவு கட்டவேண்டு விபரம் தெரிவிக்கவும் கான்ட்.9894913213
Name : U.Dineshkumar Date :12/4/2015 11:54:47 AM
மிகவும் அருமை சிங்கப்பூர் செல்ல ஆசையை துண்டுகிறது.
Name : THIYAGARAJAN Date :11/10/2015 8:29:13 AM
சிங்கப்பூர் 7 நல தங்க தங்க, போகுவ் வரத்து செலவு என்ன ஆகும்
Name : thirumalai Date :9/22/2015 6:07:23 PM
சிங்கப்பூர் எலில் கொஞ்சும் எடம்
Name : மணிகண்டன் Date :8/24/2015 10:16:41 AM
அருமை,அழகு
Name : u.venkittu Date :1/2/2015 9:48:29 AM
குட் வெரி வெரி குட்
Name : kkyaar Date :11/13/2014 7:38:23 PM
பைன் வெரி good
Name : mohan Date :10/10/2014 4:08:21 PM
வெரி good
Name : thalapathisathish Date :7/26/2014 12:32:59 PM
இட் வெரி உஸ் full
Name : arsath Date :7/3/2014 10:49:51 AM
சொல்ல வார்த்தை இருக்கிறது அனால் வார்த்தை முட்டுது
Name : mohamed Date :6/2/2014 12:32:17 PM
நான் குடும்பத்துடன் சிங்கபூர் சுற்றுலா செல்ல விரும்புகிறான் நல்ல சுற்றுலா அஜெண்ட் from சென்னை அல்லது திருச்சி suggest பண்ணுங்க
Name : dvsheeba Date :4/28/2014 2:35:23 PM
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது
Name : Pandy Kannan Date :1/3/2014 2:28:39 AM
கோடான கோடி நன்றிஹல் நக்க்ஹீரனுக்கு.சிங்கப்பூர் நேரில் பார்த்த ஔர் உணர்வு.
Name : vadivel.s Date :10/21/2013 1:34:14 PM
நல்ல தகவல்
Name : Siddique Al Ain, U.A.E. Date :8/29/2013 1:00:27 PM
சிறிய நாட்டில் சுத்தம், சுகாதாரம், எல்லோர்க்கும் ஒரே நீதி இதை ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டில் நிலை நாட்ட முயற்சிக்கணும்.
Name : D.RAJESH Date :8/1/2013 12:31:58 PM
கணினி முன் அமர்ந்து சிங்கபூரை பார்க்கின்ற வைபுகளை தந்த நக்கீரன் அவர்களுக்கு நன்றி.
Name : kgnm Date :7/19/2013 10:35:29 PM
வெரி good
Name : nehru khan Date :6/19/2013 7:00:25 PM
சூப்பர் ஏரியா
Name : G. Kabeerdas Date :5/28/2013 9:21:23 AM
சிங்கபூர் ஒரு சொர்க்க பூமி. மித நல்ல பராமரிப்பு .
Name : Zakary Date :4/7/2013 11:56:16 AM
Thanks for wrtinig such an easy-to-understand article on this topic.
Name : Victoriano Date :4/6/2013 6:42:30 AM
Do you have more great artilces like this one?
Name : jayakannan Date :3/17/2013 1:33:35 PM
singaporuku poye agavendum endra ennam vanthuduchu. tour sella evalavu selvagum.
Name : Semmaiththuliyan Date :1/30/2013 5:38:30 PM
Dear Mayootharan, I am having a large article in Tamil Language about my Singapore- Malaysia trip. If you ready to publish it thru your website, I can pass it thru e.mail. The name of article is "Malaysia Ninaivukal"
Name : P.Mayootharan> Jaffna Date :10/23/2012 12:14:19 PM
நான் ஈழத்திலிருந்து.... எமது யாழ்ப்பாணத்திலும் எண்ணற்ற இடங்கள் உள்ளன. தமிழ் பெருமை கூறுமிடங்கள் பல. யாழ்ப்பாணத்தையும் நீங்கள் கவனிக்கலாமே.... அத்துடன் நான் தரவுகளும் படங்களும் தரலாமா?
Name : Praveen Kumar Date :10/11/2012 1:10:17 PM
அன்புள்ள நக்கீரன், நான் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.உங்களது சிங்கப்பூர் சுற்றுலா கட்டுரை பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.இங்கு 22 இந்து மத கோவில்கள் உள்ளன.அதில் tank road முருகன் கோவில் மிகவும் பழமையானது.உலகின் முதல் கடற்கரை தோட்டம், உலகின் பெரிய ராட்டினம்,இரண்டு சூதாட்ட மையம் போன்ற புதிய சுற்றுலா அம்சங்கள் பயணிகளை கவரும் என்பது திண்ணம்.மொத்தத்தில் என்றென்றும் தன்னை மெருகேற்றி இளைமையாய் இருக்கிறாள் சுற்றுலா ராணி " சிங்கப்பூர்".